11 January 2006

Sraththa Samaiyal

ஸ்ரார்த்தம்

தேவையான பொருட்கள்

அ: சாஸ்திரிகளின் தேவைகள்.

செங்கல் – 6; மணல் – கீழே பரப்ப
வரட்டி – 6; சிராய் – 2 கட்டுகள்;
கற்பூரம் – 4 வில்லைகள்
அரிசி – 1/2 கிலோ;
பயத்தம்பருப்பு – 1 கைப்பிடி;
வாழைக்காய் – 1
சந்தனக்கட்டை, கல்
ஒரு ரூபாய் நாணயம் – 5
வாத்தியார் தக்ஷிணை
வாத்தியார் இலை – 6 (நீள வாழை இலை)

#ஆ. சாப்பாடு – மெனு

சோதகும்பத்திற்கும் இதே சமையல்தான்; சில சமயங்களில் சாஸ்திரிகள் சோதகும்பத்திற்கு சமாராதனை சமையல் பண்ணச் சொல்லுவார். எனவே, சோதகும்பத்திற்கென்று தனி சமையல் கிடையாது - ஒன்று, ஸ்ராத்த சமையல் அல்லது சமாராதனை சமையல். இதை மனதில் கொள்ளவும்.

பயத்தம்பருப்பு பாயசம்
தயிர் பச்சடி (வெள்ளரிக்காய்) மாங்காய்
வெல்ல பச்சடி
கறிவேப்பிலை துகையல் (பிரணடை கிடைத்தால், அதையும் சேர்க்கலாம்)
மாங்காய், இஞ்சி ஊறுகாய்
3-வித கறிகள் (வாழைக்காய், பாகற்காய், சேனைக்கிழங்கு)
கூட்டு (புடலங்காய், அவரைக்காய் போன்றவை)
மோர்க்குழம்பு (வாழைத்தண்டு, கீரைத்தண்டு)
ரசம்
தயிர்
உளுந்து வடை
அதிரஸம் அல்லது சொஜ்ஜி அப்பம்
பயத்தம் உருண்டை
எள்ளு உருண்டை
3-வித பழங்கள் (மா, பலா, வாழை, ஆப்பிள், திராக்ஷை, அன்னாசி)
ஸ்ராத்த சமையலில் மாதுளம்பழம் சேர்க்கக் கூடாது.

#இ : மளிகை சாமான்கள் (15 நபர்களுக்கு)
பயத்தம் பருப்பு – 1 1/2 கிலோ
பாகு வெல்லம் – 1 1/2 கிலோ
முழு உளுந்து – 1 கிலோ
உளுந்து 1/2 பருப்பு – 200 கிராம்
வெள்ளை எள் – 200 கிராம்
கறுப்பு எள் – 100 கிராம்
ரவை – 1/2 கிலோ
மைதா – 1/2 கிலோ
ஏலக்காய் – 10 கிராம்
Refined Oil – 2 கிலோ
தேன் – சிறிய பாட்டில்
சுக்குப் பொடி – 50 கிராம்
மிளகு – 100 கிராம்
குண்டு மிளகாய் – 100 கிராம்
களி பாக்கு – 50 கிராம்
ரசிக்லால் பாக்கு – 50 கிராம்
சுண்ணாம்பு
பொன்னி பச்சை அரிசி – 3 கிலோ
Economy அரிசி – 1 கிலோ (கொஞ்சம் மலிவான விலையில்)
உப்பு – 1 கிலோ

ஈ: காய்கறிகள்

மாங்காய் – 3
வெள்ளரிக்காய் – 250 கிராம்
வாழைக்காய் – 6 (வாத்தியாருக்கும் சேர்த்து)
பாகற்காய் – 1/2 கிலோ
புடலங்காய் (நீளமானது) – 1; (சின்னதாக இருந்தால் 3/4 கிலோ)
அல்லது, அவரைக்காய் 3/4 கிலோ
சேனைக்கிழங்கு – 3/4 கிலோ
வாழைத்தண்டு – சிறியது 1 (அல்லது கீரைத்தண்டு)
இஞ்சி – 100 கிராம்
கறிவேப்பிலை – 2 முதல் 3 ரூபாய்க்கு
வெற்றிலை – 50
பிரண்டை – ஒரு கணு
வாத்தியார் இலை (பெரிதாக இருக்கும்) – 6
வாழை இலை – நபர்களை பொறுத்து
புஷ்பம் – 6 முழம்
மாம்பழம்
பலாச்சுளை
திராக்ஷை – 1/4 கிலோ
ஆப்பிள் – 2 (இவற்றில் ஏதாவது 3 வகைகள்)
வாழைப்பழம் – 1 டஜன்
வெண்ணெய் – 3/4 கிலோ
பால் – 4 முதல் 6 லிட்டர் (தயிர் மற்றும் காஃபிக்கு)

அம்மா திவசமானால் – blouse bits 100 cm – 4 அல்ல்து 5 தேவைக்கேற்ப)

ராஜப்பா
22-Jan-2010
பகல் 11:50

தமிழ் வருஷப் பிறப்பு விசேஷ சமையல்

தமிழ் வருஷப் பிறப்பு விசேஷ சமையல்

தமிழ்ப் வருஷப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, கோசுமல்லி,ஆமவடை, பாயஸம் ஆகியவைகளை செய்து சாப்பிடுவது வழக்கம். சில வீடுகளில் போளியும் பண்ணுவார்கள். எங்கள் வீட்டில் பால்போளி செய்வோம்.

செய்முறை:

வேப்பம்பூ பச்சடி

இந்த பச்சடியை ஒரு முறை சாப்பிட்டீர்களானால் பின்பு விடவே மாட்டீர்கள்; ருசி மட்டுமல்ல, நிறைய மருத்துவ குணங்களும் அடங்கியது.

வேப்பம்பூ - 2 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
வரமிளகாய் (சிவப்பு) - 6
கடுகு, தாளிக்க
கறிவேப்பிலை, பெருங்காயம் - கொஞ்சம்
வெல்லம் - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - சிறிது
அரிசி மாவு - 1 டீஸ்பூன்

வாணலியில் எண்ணெய் ஊற்றி வேப்பம்பூவை கருகாமல் சிவப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, க்டுகு, கிள்ளிய மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றைத் தாளிக்கவும்.

புளியைக் கரைத்து, ஒரு டம்ளருக்கு அதிகமாக விட்டு, உப்பு போட்டு, நன்கு கொதிக்க விடவும்; கொதிக்கும் போது வெல்லத்தைப் போடவும்.

வெல்லம் கரைந்தவுடன், அரிசி மாவைக் கரைத்து விட்டு, சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.

வேப்பம்பூ பொடியைப் போட்டு கலக்கவும்.

மாங்காய் பச்சடி

மாங்காய் - 1 பெரிது
வெல்லம், பொடித்தது - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
மஞ்சள் பொடி, உப்பு

மாங்காயை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மாங்காய் துண்டுகளை போட்டு, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போட்டு, காய் மூழ்கும்வரை தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

காய் நன்றாக வெந்தவுடன், கரண்டியால் மசித்துக் கொள்ளவும். வெல்லப் பொடியை சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து காயுடன் சேர்ந்த பின், கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

கோசுமல்லி

கோசுமல்லி சத்து மிகுந்த ஒரு உணவு. பயத்தம்பருப்பும், காய்களும் கலந்த ஒரு சிறந்த ஸாலட்.

2 கப் பயத்தம் (பாசி) பருப்பை நன்கு அலம்பி, தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு மாங்காயை சீவி பல் பல்லாக நறுக்கிக் கொள்ளவும்
3 காரட்டை (CARROT) தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
1 வெள்ளரிக்காயை சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
1/2 மூடி தேங்காயை துருவிக் கொள்ளவும்.

தண்ணீரை இறுத்து விட்டு ஊறிய பருப்பில் மேற்சொன்ன காய் துருவல்களை சேர்க்கவும்.

ஒரு பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கி இதில் போடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து பருப்பில் போடவும். உப்பு போடவும்.

நன்றாக கலக்கவும். கோசுமல்லி ரெடி.

பால் போளி

வருஷப் பிறப்பன்று போளி செய்வது எங்கள் வீட்டில் வழக்கம் - அதுவும் பால் போளி ! எல்லாரும் மிக விரும்பி சாப்பிடும் போளி.

தேவையானவை

மைதா, 200 கிராம்

சிரோடி ரவை, 50 கிராம். (சிரோடி ரவை என்பது பம்பாய் ரவையை விட கொஞ்சம் மெலிதாக இருக்கும்; பங்களூரில் கிடைக்கும்)

நெய், 4 டேபிள்ஸ்பூன்

பால், 2 லிட்டர்

சர்க்கரை, 2 டம்ளர்

பச்சைக் கல்பூரம், குங்குமப்பூ - சிட்டிகை

முந்திரி, பிஸ்தா பருப்பு, தேவையானால்

செய்முறை

மைதா, ரவா, நெய் மூன்றையும் சேர்த்து கெட்டியான மாவாகப் பிசைந்து கொள்ளவும். மெல்லிய வட்டங்களாக பூரி போன்று இட வேண்டும்.

பாலை நன்றாகக் கொதிக்க விட்டு நன்றாகச் சுண்டியவுடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்துக் மிதமான தீயில் கொதித்துக் கொண்டே இருக்க விடவும்.

அடுப்பில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, மிதமான தீயில், மெல்லிய வட்டங்களாக இட்ட பூரிகளை பொரித்து, சூட்டுடனேயே பாலில் முக்கி, ஒரு தாம்பாளத்தில் போட்டு, ஒவ்வொன்றாக மடித்து வைத்து விடவும்.

கடைசியில், பாலை போளிகளின் மேலேயே ஊற்றி வைத்தால் நன்றாக ஊறிவிடும்.

முந்திரி, பாதாம் பிஸ்தா தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
 
ஆமவடை, பாயஸம்
 
வடை, பாயஸம் செய்வது எல்லாருக்கும் தெரிந்ததால், செய்முறை இங்கு குறிப்பிட இல்லை.
 
எல்லாருக்கும் வருஷப் பிறப்பு வாழ்த்துக்கள்.

ராஜப்பா
10-04-2010
10 மணி

08 January 2006

Angaaya Podi அங்காயப் பொடி

ஷீலா ராணி சுங்கத் தமிழக அரசில் ஒரு அதிகாரி. அவர் இன்று [08 ஜனவரி 2012] The New Indian Express-ல் எழுதியுள்ளதை பகிர்ந்து கொள்ளுகிறேன். [நன்றி திருமதி ஷீலா ராணி சுங்கத்திற்கும், Indian Express-க்கும்]

ஜீரணத்திற்கும், சமீபத்தில் குழந்தை பெற்றவர்களுக்கும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருக்கும் இளம்பெண்களுக்கும், ஏன் எல்லாருக்குமே மிகச்சிறந்ததான ஒரு பொடி அங்காயப் பொடி. பல மூலிகைகள், இயற்கை சாமான்கள் அடங்கியது. ஒவ்வொரு வீட்டிலும் தலைமுறை, தலைமுறையாக பாட்டி வழி, அம்மா வழி என வாழையடி வாழையாக வந்துள்ள இந்தப் பொடி செய்வது மிகவும் எளிது.

அங்காயப் பொடியை நல்ல சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டு பிசைந்து சாப்பிட வேண்டும்.

இப்போது, அங்காயப் பொடி செய்முறையை பார்ப்போம். இது எங்கள் அம்மா பண்ணிய, சொல்லிக் கொடுத்த, செய்முறை.

தேவையான பொருட்கள்.

தனியா --- 1/2 கப்
துவரம் பருப்பு --- 6 டேபிள்ஸ்பூன்
காய்ந்த வேப்பம்பூ --- 1/4 கப்
சுண்டைக்காய் வத்தல் --- 20 லிருந்து 30
மணத்தக்காளி வத்தல் --- 1/4 கப்
கறிவேப்பிலை --- 1/2 கப்
மிளகு --- 3 டீஸ்பூன்
கண்டந்திப்பிலி --- 3 சிறிய துண்டுகள்
அரிசி திப்பிலி - கொஞ்சம்
வரமிளகாய் --- 6
ஜீரகம் --- 3 டீஸ்பூன்
ஓமம் --- 1 டீஸ்பூன்
சுக்கு --- 1 சிறிய துண்டு
வெந்தயம் --- 1 டீஸ்பூன்
பெருங்காயம் --- ஒரு சிறிய துண்டு (அல்லது பொடியாக இருந்தால் 1/2 டீஸ்பூன்)
கல் உப்பு --- 1 அல்லது 2 டீஸ்பூன்.

செய்முறை

உப்பைத் தவிர மற்ற எல்லாவற்றையும் (எண்ணெய் விடாமல்) சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

உப்பை சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கவும்.

அங்காயப் பொடி தயார்.

அங்காயப் பொடியின் மருத்துவ குணங்கள் ::

தனியா (கொத்தமல்லி விதை) ஒரு சிறந்த anti-oxidant; cholesterol ஐ குறைக்கும் வல்லமை பெற்றது. மற்றும் anti-bacterial, and diuretic.

வேப்பம்பூ [நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்] கண் பார்வைக்கு சிறந்தது; ஜீரணத்திற்கு, முக்கியமாக LIVER சம்பந்தமானவைகளுக்கு மிகவும் சிறந்தது. மேலும், குடல் புழுக்களை (intestinal worms) அழிப்பதில் வேப்பம்பூ பெயர் பெற்றது.

சுண்டைக்காய் வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் இரண்டுமே வாயுவை (GAS) குறைப்பவை.

சுண்டைக்காய் வத்தல் anti-bacterial and anti-microbial குணம் படைத்தது.

மணத்தக்காளி கீரையும், வத்தலும் விட்டமின் B நிரம்பியவை. வாய் மற்றும் குடல் புண்களை ஆற்றும் சக்தி படைத்தவை. குடல் சம்பந்தமான நோய்களுக்கு மிக மிக சிறந்தது.

கறிவேப்பிலையும், தனியாவும் நார்ச்சத்து [FIBRE] நிரம்பியவை. கறிவேப்பிலையில் இரும்புச் சத்து நிறைய உள்ளது; இது anti-diabetic மற்றும் anti-oxidant. இளம் நரையை தவிர்க்கிறது.

கறிவேப்பிலையில் anti-cancer குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன.

ஓமம், ஜீரகம், மிளகு, சுக்கு யாவையுமே ஜீரணத்திற்கு நல்லவை.

கண்டந்திப்பிலி ஜலதோஷம், உடல்வலி, தொண்டை கரகரப்பு, அஜீரணம் ஆகியவைகளுக்கு நல்லது

அரிசி திப்பிலி குடல் புழுக்களை அழிப்பதில் சிறந்தது.

[இவை எல்லாமே நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.]
 
Rajappa
10:00 AM
08-01-2012

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...