Showing posts with label Arvi. Show all posts
Showing posts with label Arvi. Show all posts

05 March 2010

சேப்பங்கிழங்கு Seppankizhangu

சேப்பங்கிழங்கு, ARBI or Arvi (hindi), Colacosia or TARO(English), Chamagadda (telugu)

தமிழ்நாட்டில் நாம் சேப்பங்கிழங்கை கறி பண்ணவும், வறுவல் பண்ணவும், மோர்க்குழம்பில் போடவும் உபயோகிக்கிறோம்.

சேப்பங்கிழங்கு கறி (Roast)

சேப்பங்கிழங்கு, 1 கிலோ
எண்ணெய், 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, 1 டீஸ்பூன்
உப்பு, 2 டீஸ்பூன்



கிழங்கை வேகவைக்கவும். தோல் உரித்து, கொஞ்சம் சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பெரிய தட்டில் கிழங்கைப் போட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து பிசறிக் கொள்ளவும். சிறிது நேரம் (15 நிமிஷம்) ஊறட்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், பிசறி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, மிதமான தீயில் வதக்கவும்.

தேவையானால் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

கிழங்கு நன்றாக roast ஆனதும், கடுகு தாளித்து இறக்கவும்.

வறுவல்

கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

முன்பு போலவே கிழங்குடன் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு பிசறிக் கொள்ளவும்.

வாணலியில் 1/4 லிட்டர் எண்ணெய் விட்டு, சூடானதும், கிழங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரிக்கவும்.

சேப்பங்கிழங்கை மோர்க்குழம்பிலும் (செய்முறை) போடலாம்.

கர்னாடகா, மஹாராஷ்டிரா மற்றும் பல வட மாநிலங்களில் சேப்பங்கிழங்கு இலையை சமைத்து சாப்பிடுகிறார்கள். Alu Chi Wadi மஹாராஷ்ட்ராவில் மிக பிரசித்தம்.

Alu chi Wadi

சேம்பு இலைகளை (Alu che paana) காம்பு நீக்கி, கடலைமாவு, புளி விழுது, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடி, பெருங்காயம், உப்பு இவை அடங்கிய கலவையில் பிரட்டி, ஆவியில் வேக விடவும்.

பின்பு, வேக வைத்த இலைகளை நறுக்கி, அப்படியேவோ அல்லது கொஞ்சம் எண்ணெயில் வதக்கியோ சாப்பிடலாம்.

ராஜப்பா
11:30 காலை
05-03-2010

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...