Showing posts with label Peas. Show all posts
Showing posts with label Peas. Show all posts

05 April 2018

Bisi Bele Baath Tamilnadu Style

பிஸி பேளே பாத்

தேவையானவை
அரிசி - 400 கிராம்
துவரம் பருப்பு - 200 கிராம்
கொப்பரைத் துருவல், 2 டேபிள்ஸ்பூன்
புளி, எலுமிச்சம் பழ அளவு
உப்பு,
கருவேப்பிலை, சிறிது
நெய், 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன்


வறுத்து அரைக்க
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேஸ்பூன்
வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் (சிகப்பு), 10 - 12
பட்டை, சிறிது
கிராம்பு, 3

காய்கறிகள்:
சின்ன வெங்காயம், 100 கிராம், உருளைக்கிழங்கு, காரட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், தலா 50 கிராம், முருங்கைக்காய் (1)

செய்முறை

1. வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு முதலானவைகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் கொப்ப்ரை துருவல், 5 சின்ன வெங்காயம் (பச்சையாக) சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
3. குக்கரில் சாதத்தை செய்து கொள்ளவும்.
4. இன்னொரு குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கவும்.
5. புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும்.
6. புளித்தண்ணீரில் காய்கறிகளைப் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை மட்டும் எண்ணெயில் கொஞ்சம் வதக்கி வேக விடவும்.
7. அரைத்து வைத்துள்ள விழுதை இதில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் அணைத்து விடவும்.
8. ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் சாதத்தைக் கொட்டி, பருப்பை சேர்த்து, தேவையான் உப்பு போட்டு, நன்றாக கலந்து கொள்ளவும்.
8. வெந்த காய்கறி கலவையை கொட்டி கிளறவும்.
9. நெய்யை காய்ச்சி ஊற்றவும்.
10. கொஞ்சம் எண்ணெயில் கருவேப்பிலையை தாளித்து, சாதத்தில் போடவும்.



பிஸி பேளே பாத் தயார்

ராஜப்பா
12:20 Pm
1-2-2010

28 March 2018

PEAS - VEGETABLE PULAO

தேவையானவை

அரிசி 2 1/2 டம்ளர்
உருளைக்கிழங்கு 2 மீடியம் சைஸ்
காரட் 1
பீன்ஸ் 10-15
குடைமிளகாய்  1/4
புதுசான பச்சைப் பட்டாணி, உரித்தது, 2 கைப்பிடி
சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) 8-10
பூண்டு உரித்தது 15-20
இஞ்சி 1” துண்டு
தக்காளி 3 மீடியம் சைஸ்
பச்சை மிளகாய் 7-8
கிராம்பு 4
ஏலக்காய் 2
ஜீரகம் 1/2 டீஸ்பூன்
பட்டை 1 சிறிய துண்டு
மிளகாய்ப் பொடி 1/2 டீஸ்பூன்
எண்ணெய் / நெய்  8 டேபிள்ஸ்பூன்
உப்பு 3 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 5 - 6 டம்ளர் (ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர்)

செய்முறை

அரிசியை தண்ணீரில் நன்றாக களைந்து, தண்ணீரை இறுத்து விட்டு, 10 - 12 நிமிஷம் அரிசியை வைத்துக்கொள்ளவும்.

கிராம்பு, ஏலக்காய், பட்டை இவைகளை பொடித்துக் கொள்ளவும்.

காய்கறிகளை சதுரங்களாக நறுக்கவும்.

கொதிக்கும் நீரில் தக்காளியை 2 நிமிஷம் போட்டு, பின்னர் தோலுரித்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோலுரித்து, நன்கு அலம்பி, பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.

குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்/நெய் விட்டு, சூடானதும், பொடித்த கிராம்பு முதலானவைகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

அடுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் விழுது; 4 நிமிஷம்
next, பூண்டு இஞ்சி விழுது; 3 நிமிஷம்

மிளகாய்ப் பொடி, உப்பு சேர்க்கவும்; 2 நிமிஷம் வதக்கவும்.

நறுக்கிய காய்கறிகளை போட்டு, மிச்சமுள்ள நெய்/எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் ஊற்றி, வதக்கவும் - 8 நிமிஷம்.

களைந்த அரிசியை போட்டு, 3 நிமிஷம் வதக்கவும்.

 காய்கறிகளும், அரிசியும் நன்கு ஒன்றுசேர வேண்டும்.

5-6 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தக்காளி விழுதை சேர்க்கவும்.
குக்கரை மூடி, சமைக்கவும்.

4 விஸில் வந்தபிறகு அடுப்பை அணைக்கவும்.

வெங்காயம்+தக்காளி RAITHA-வுடன், சூடாக புலவ் சாப்பிடவும். ENJOY.

rajappa
11:10 AM
22-JAN-2012

**** நேற்று, 21 ஜனவரி, சனிக்கிழமை, நான் இந்த செய்முறையின்படி புலவ் செய்தேன். ருசியாக வந்தது. எல்லாரும் ருசித்து சாப்பிட்டோம். YOU ALSO TRY, ENJOY.



11 January 2018

Aloo Mutter

Ingredients

Aloo 2 , cut in cubes
Peas 1 cup, cooked
Onion 1 medium size, chopped
Tomato 1 chopped
Kadugu
Ginger 1 inch long
Garlic 4 pal
Pachchai Milakai 6 – 8
Haldi powder 1/2 tsp
Coconut milk 1 cup
Oil 6 tsp
Salt

METHOD
Make a paste with green chillies, Inji, Poondu
Heat oil and saute Kadugu
Add chopped onion – saute till onion becomes light brown.
Add tomato and then chilli-poondu paste.
Saute till the raw smell disappears.
Add haldi powder.
Mix well
Add potatoes, and salt; combine well.
Add Coconut milk, cooked peas, water
Bring it to a boil.
Cook for 5 minutes.

Rajappa
19:30 on 23 Dec 2009

11 December 2017

Vegetable Cutlet

நேற்று மதியம் கட்லட் செய்து சாப்பிடலாம் என திடீரென தோன்றியது. பிறகு என்ன, சுறுசுறுப்பாக எழுந்து, வேலையை துவக்கினேன்.

நான்கு உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கினேன். பச்சைப் பட்டாணியை உரித்து 3/4 கப் எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் பீன்ஸ், ஒரு பீட்ரூட் (தோல் சீவியது), 3 காரட் (தோல் சீவியது) ஆகியவற்றையும் நறுக்கி எல்லாவற்றையும் வேக விட்டேன். கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். [குடைமிளகாயையும் போடலாம்]

2 வெங்காயத்தையும், 4 பச்சை மிளகாய்களையும் நறுக்கினேன். இஞ்சி வாசனை பிடிக்குமா, கொஞ்சம் இஞ்சியையும் தோல் சீவி நறுக்கிக் கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், மிளகாயை வதக்கினேன். பின்னர் வெந்த காய்களை சேர்த்து வதக்கினேன். 2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடியையும், கொஞ்சம் உப்பையும் போட்டேன். புதிய பச்சைக் கொத்தம்ல்லி தழைகளை நறுக்கி போட்டேன். உருளைக்கிழங்கை இப்போது போடாதீர்கள். காய்கள் வதங்கியதும் அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிட்டேன். பின்னர், உ.கிழங்கை மசித்து அதில் சேர்த்தேன். எல்லாக் காய்களையும் ஒன்று சேர்த்து தயிர்-மத்தால் மசித்துக் கொண்டேன். தண்ணீர் இருக்கக் கூடாது. ஒரு 20 நிமிஷங்கள் வடிய விட்டேன்.

3 டேபிள் ஸ்பூன் சோளமாவை (CORN FLOUR) சிறிது தண்ணீரில் கரைத்து கொண்டேன்; [மைதா மாவையும் உபயோகிக்கலாம்] காய்கள் கலவையை சிறு உருண்டைகளாக வடை மாதிரி தட்டிக்கொண்டு, இந்த சோளமாவு கரைசலில் தோய்த்து, உடனே BREAD CRUMBS-ல் புரட்டிக் கொண்டேன்.

இந்த ”கட்லட்களை” Refrigerator-ல் ஒரு மணி நேரம் வைத்தேன். பிறகு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் மூன்று, நான்கு கட்லட்களை போட்டு இரண்டு பக்கமும் brown ஆகுமாறு பொன்னிறமாக shallow-fry பண்ணினேன். வாணலியில் போடும்போது கட்லட்கள் பிரியாமல், உடையாமல் பார்த்துக் கொள்ளவும் (Fridge-ல் வைப்பது இதற்காகத்தான்)

தக்காளி கெட்சப் அல்லது சாஸுடன் சாப்பிடுங்கள்.

ராஜப்பா
5:45 மாலை
14-12-2011

01 October 2017

Peas, Beetroot Kurma

PEAS, BEETROOT KURUMA

INGREDIENTS
Beetroot 2, cut into small pieces
Peas 1/2 cup
Curd 1/2 cup
Rice Flour 1 tsp

For GRAVY
Onion 1, big size, chopped
Green Chillies 4 Nos
Ginger 1 inch long
Garlic 1 pal
kaskasa 2 tsp
cashew nuts a few
Coconut 1/4 cup

METHOD
Peel, cut beetroot in small pieces and BOIL along with Peas.
Grind all the items for Gravy into a paste.
Combine salt, rice flour, and gravy in a bowl.
See that no lumps are formed.
Add this to the vegetables (beet + peas) and stir to combine.
Cook for 5 minutes.
Add curd.

Rajappa
19:50 on 23 Dec 2009

Peas Kurma

PEAS KURUMA

Ingredients
Peas 2 cups
Onion 1/4 chopped
Dhania powder 2 tsp
Jeeraga powder 1 tsp
Milagai powder 2 tsp
haldi 1 tsp
Oil 2 tbsp

For Paste
Onion 1 chopped
tomatoes 2 large size
Coconout, grated 2 tbsp
Grambu 3
Lavanga Pattai 1 inch long
Poondu 4 pal
Ginger 1 inch

For Seasoning
Jeeragam, Kadugu, Kariveppilai 1 tsp each

METHOD
Heat oil, saute the items (for paste) one by one.
Allow to cool and then make a paste in the mixie.
Add oil and saute the items for seasoning.
Add the paste.
Add dhania powder, mirchi powder. haldi powder, salt.
Add peas along with 1 1/2 cups water, bring to boil.
Simmer for 5 minutes. Add koththamalli thazhai.

Rajappa
18:40 on 23 Dec 2009

ALOO, PEAS KURUMA

இன்று (11-01-2011) பகல் லஞ்ச்சிற்கு சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள என்ன செய்வது என விஜயா யோசித்த சமயத்தில், “குருமா” ஐடியாவை நான் கொடுத்தேன்; அதுமட்டுமல்ல, நானே செய்வதாகவும் கூறினேன். பின்பு என்ன, காய்கறிகளை அலம்ப ஆரம்பித்து ..... குருமா ரெடி பண்ணினேன். சரியாக 1 1/4 மணி நேரம் பிடித்தது. நன்றாக வந்தது, ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.

உருளை, பட்டாணி, குடமிளகாய் குருமா

தேவையானவை:

1. விழுதாக அரைக்க:

துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
சோம்பு, 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு, 4

2. வதக்க:

கிராம்பு, 3
ஏலக்காய், 3
பட்டை, சிறிது ----- இம்மூன்றையும் நன்கு பொடித்துக் கொள்ளவும்.

மற்றவை:

உருளைக்கிழங்கு, 400 கிராம்
பச்சை பட்டாணி (fresh), 200 கிராம், உரித்தது
குடமிளகாய், 1
காரட், 3
(நூல்கோல், காலிஃப்ளவ்ர் இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
வெங்காயம் மீடியம் சைஸ், 2
தக்காளி, 1

பூண்டு - இஞ்சி விழுது, 1 டே.ஸ்பூன்
மிளகாய்த் தூள், 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள், 1 டீஸ்பூன்
தனியா தூள், 3 டீஸ்பூன்
கரம் மசாலா தூள், 1/2 டீஸ்பூன்

எண்ணெய், 2 டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை

உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து, உரித்து, துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

காய்கறிகளை அலம்பி, நறுக்கி, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 1 டேஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும், கிராம்பு ஆகியவற்றை போட்டு வதக்கவும். (stir fry)

வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பூண்டு - இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளியை போட்டு வதக்கவும்.

கொஞ்சம் எண்ணெய் விடலாம்.

5 நிமிஷங்கள் வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள். உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.

தனியாத் தூள் போடவும். கரம் மசாலா போடவும்.

அரைத்த விழுதை போட்டு 5 நிமிஷங்கள் வதக்கவும். பச்சை வாசனை போக வேண்டும்.

பின்பு, வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற காய்கறிகளை இதில் போடவும். தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.

குருமா ஆற ஆற கெட்டியாக ஆகிவிடும்; எனவே வேண்டுமென்கிற அளவிற்கு தண்ணீர் விடவேண்டும்.

குருமா ரெடி. சப்பாத்தி, புல்கா, தோசை ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.

ராஜப்பா
இரவு 8-20 மணி
11 ஜனவரி 2011

Cauliflower Green Peas Kuruma

காலிஃப்ளவர் - பட்டாணி குருமா

நேற்று இரவு சப்பாத்தி செய்ய எண்ணினோம். சேர்த்து சாப்பிட குருமா பண்ணலாம் என நான் சொன்னேன்; குருமாவை நானே பண்ணுவதாகவும் சொன்னேன்.

முதலில், இரண்டு உருளைக்கிழங்குகளை (மீடியம் சைஸ்) தோல் சீவி, துண்டங்களாக் நறுக்கினேன். அடுத்து, ஒரு நூல்கோலை இதேபோன்று தோல் சீவி துண்டங்களாக நறுக்கிக் கொண்டேன். 7,8 பீன்ஸ்களையும் நறுக்கினேன். புதிய பச்சைப் பட்டாணிகளை தோல் உரித்து ஒரு 3/4 கப் அளவிற்கு எடுத்துக் கொண்டேன். காலிஃப்ளவர் (சிறியது) எடுத்து நறுக்கி, தனியாக இன்னொரு பாத்திரத்தில் உப்பு சேர்த்த தண்ணீரில் ஃப்ளவர் பூக்களை போட்டேன்.

காலிஃப்ளவர், பட்டாணி தவிர்த்து மற்ற காய்களை மிதமான் தீயில் வேக விட்டேன். ஒரு கொதி வந்ததும், சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டேன். காய்கள் கொதித்துக் கொண்டிருக்கட்டும் ...

பெரிய வெங்காயம் (இரண்டு) தோல் உரித்து, பொடியாக நறுக்கினேன். 10 பூண்டு உரித்துக் கொண்டேன். சிறிய இஞ்சித்துண்டை தோல் நீக்கி எடுத்துக் கொண்டேன். ஒரு மீடியம் சைஸ் தக்காளியை எட்டாக நறுக்கினேன். இவற்றை மிக்ஸியில் போட்டு, இரண்டு டீஸ்பூன் தனியா தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய்த் தூள், கொஞ்சம் சோம்பு, கொஞ்சம் பச்சை கொத்தமல்லி தழை, ஒரு சிறிய கரண்டி தயிர் ஆகியவற்றையும் போட்டு, விழுதாக அரைத்துக் கொண்டேன்.

காய்கள் பாதி வெந்தவுடன், அவற்றோடு காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து மீண்டும் வேக விட்டேன். (ஃப்ளவரும் பட்டாணியும் சீக்கிரமே வெந்து விடுமாதலால் இவ்வாறு செய்தேன்). காய்கள் கொதித்துக் கொண்டிருக்கட்டும் ...

ஒரு பெரிய வாணலியில், 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் எட்டு கிராம்புகளையும் ஒரு ஏலக்காயையும் பொடித்து, ஒரு பட்டையை ஒடித்து போட்டு இரண்டு நிமிஷங்கள் பொரித்தேன். பின்னர் அரைத்த விழுதை போட்டு, 15 கிராம் வெண்ணெய் சேர்த்து, நன்கு வதக்கினேன்; பச்சை வாசனை போக வேண்டும். பத்து நிமிஷங்கள் வதக்கியவுடன், விழுது அரைத்த மிக்ஸி பாத்திரத்தை அலம்பிய தண்ணீரை இதில் ஊற்றி கொதிக்க விட்டேன். இன்னும் ஆறு நிமிஷங்கள்.

வெந்த காய்களை இதில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து, கொஞ்சம் உப்பு போட்டு, 7-8 நிமிஷங்கள் கொதிக்க விட்டேன். அடுப்பை அணைக்கும் போது சுடச்சுட புல்கா சப்பாத்திகள் ரெடியாக இருந்தன (விஜயா).

பின்னர் என்ன, உணவு மேஜையில் 5 பேரும் ஆஜர்; இரவு உணவு ஆரம்பித்தது, மணத்தோடும் ருசியோடும்.

ராஜப்பா
8-12-2011
11:30 AM

இது போல விழுது அரைக்காமல், கிராம்பு, ஏலக்காய், பட்டை பொடித்து,சோம்பு கொஞ்சம் போட்டு, எண்ணெயில் பொரித்து, அதே எண்ணெயில் வெங்காயம், ready-made பூண்டு-இஞ்சி விழுது, தக்காளி இவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கு, பட்டாணி மட்டும் போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு, உருளை-பட்டாணி GRAVY மூன்று நாட்களுக்கு முன்னால் செய்தேன். சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள.

இங்கு பட்டாணி மிக மலிவாக கிலோ 40.00 விற்கு கிடைக்கிறது, எனவே எல்லாம் “பட்டாணி” சமையல் குறிப்புகள்.

25 February 2010

Sprouted Peas Usal

முளை கட்டிய பட்டாணி உசல்

தேவையானவை
சுண்டல் பட்டாணி (150 கிராம்) முளை கட்டியது.
வெங்காயம், 1 பொடியாக நறுக்கியது.
தக்காளி, 2, பொடியாக நறுக்கியது.
மிளகாய்ப் பொடி, 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, சிறிது,
கரம் மசாலா பொடி, 1/2 டீஸ்பூன்

தாளிக்க : எண்ணெய், கடுகு, ஜீரகம்

செய்முறை

முளை கட்டிய பட்டாணியை தண்ணீர் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

(உங்களுக்கு பிடிக்குமானால், 1 டேபிள்ஸ்பூன் பூண்டு-இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்).

மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி போட்டு வதக்கவும்.

நறுக்கிய தக்காளியைப் போட்டு 5 நிமிஷம் வதக்கவும்.

வெந்த பட்டாணியை தண்ணீருடன் சேர்த்து போட்டு 5 நிமிஷம் கொதிக்க் விடவும்.

உசல் ரெடி!

ராஜப்பா
4:40 மாலை
25-02-2010

25 January 2009

Green Peas Masala

Green Peas Masala



பொருட்கள்


பச்சை பட்டாணி – 2 கப், வெங்காயம் – 2, சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்


இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தக்காளி – 2


மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்


உப்பு – தலா 1/2 டீஸ்பூன், எண்ணெய், நெய் – 1 டீஸ்பூன் தலா.

செய்முறை


வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை தனித்தனியே நறுக்கிக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், சீரகத்தை வதக்கவும்.


தக்காளியை சேர்த்து, வதக்கி, ஒரு கப் தண்ணீர் விடவும்.


கொதிக்க ஆரம்பித்ததும் பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.


பட்டாணி நன்றாக வெந்து க்ரேவியாக வந்ததும் இறக்கி, பரிமாறவும்

ராஜப்பா
25-01-2009, 17:25 PM

** நன்றி: ஆனந்தவிகடன், 28-01-2009 இதழிலிருந்து

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...