CAULIFLOWER PEAS
உருளைக்கிழங்கு
---- 2
நூல்கோல் ------ 1
பீன்ஸ் ---- 8
பச்சைப்
பட்டாணி, உரித்தது ---- 3/4 கப்
காலிஃப்ளவர்
---- சிறியது 1
வெங்காயம்
---- 2
தக்காளி
பழம் ----- 1
பூண்டு
----- 10 பல்
இஞ்சி
----- 3 செமீ
பச்சை
கொத்துமல்லி ----- கொஞ்சம்
தயிர் --- ஒரு சிறிய கரண்டி
வெண்ணெய் ----- 25 கிராம்
உப்பு
மஞ்சள்
தூள் 1/2 டீஸ்பூன்
கிராம்பு
--- 8
ஏலக்காய்
--- 1
பட்டை -----
1 செமீ
மிளகாய்
பொடி --- 2 டீஸ்பூன்
தனியா
பொடி ---- 2 டீஸ்பூன்
சோம்பு ----
கொஞ்சம்
எண்ணெய்
----- 4 டேபிள்ஸ்பூன்
METHOD
முதலில், உருளைக்கிழங்குகளை தோல்
சீவி, துண்டங்களாக்
நறுக்கினேன்.
அடுத்து, நூல்கோலை இதேபோன்று தோல்
சீவி துண்டங்களாக நறுக்கிக் கொண்டேன்.
பீன்ஸ்களையும்
நறுக்கினேன்.
பச்சைப்
பட்டாணிகளை தோல் உரித்து எடுத்துக் கொண்டேன்.
காலிஃப்ளவர்
(சிறியது) எடுத்து நறுக்கி, தனியாக இன்னொரு பாத்திரத்தில் உப்பு சேர்த்த தண்ணீரில் ஃப்ளவர் பூக்களை
போட்டேன்.
காலிஃப்ளவர், பட்டாணி தவிர்த்து மற்ற
காய்களை மிதமான் தீயில் வேக விட்டேன்.
ஒரு கொதி
வந்ததும், சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டேன்.
காய்கள்
கொதிக்கட்டும்.
வெங்காயம்
தோல் உரித்து, பொடியாக நறுக்கினேன்.
பூண்டு
உரித்துக் கொண்டேன்.
சிறிய
இஞ்சித்துண்டை தோல் நீக்கி எடுத்துக் கொண்டேன்.
தக்காளியை
எட்டாக நறுக்கினேன்.
இவற்றை
மிக்ஸியில் போட்டு, தனியா தூள், மிளகாய்த் தூள், கொஞ்சம் சோம்பு, கொஞ்சம் பச்சை கொத்தமல்லி தழை, தயிர் ஆகியவற்றையும் போட்டு, விழுதாக அரைத்துக் கொண்டேன்.
காய்கள்
பாதி வெந்தவுடன், அவற்றோடு காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து மீண்டும் வேக விட்டேன்.
(ஃப்ளவரும் பட்டாணியும் சீக்கிரமே வெந்து விடுமாதலால்
இவ்வாறு செய்தேன்). காய்கள் கொதித்துக் கொண்டிருக்கட்டும் ...
ஒரு பெரிய வாணலியில், எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் கிராம்பு,ஏலக்காயை பொடித்து, ஒரு பட்டையை ஒடித்து போட்டு இரண்டு நிமிஷங்கள் பொரித்தேன்.
பின்னர்
அரைத்த விழுதை போட்டு, வெண்ணெய் சேர்த்து, நன்கு வதக்கினேன்; பச்சை வாசனை போக வேண்டும்.
பத்து
நிமிஷங்கள் வதக்கியவுடன், விழுது அரைத்த மிக்ஸி பாத்திரத்தை அலம்பிய தண்ணீரை இதில் ஊற்றி கொதிக்க
விட்டேன். இன்னும் ஆறு நிமிஷங்கள்.
வெந்த
காய்களை இதில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து, கொஞ்சம் உப்பு போட்டு, 7-8 நிமிஷங்கள் கொதிக்க விட்டேன்.
அடுப்பை
அணைக்கும் போது சுடச்சுட புல்கா சப்பாத்திகள் ரெடியாக இருந்தன
பின்னர்
என்ன, உணவு
மேஜையில் 5 பேரும் ஆஜர்; இரவு உணவு ஆரம்பித்தது, மணத்தோடும் ருசியோடும்.
RAJAPPA