Showing posts with label Thakkali Saadam. Show all posts
Showing posts with label Thakkali Saadam. Show all posts

06 April 2018

தக்காளி சாதம் (POONDU)

தக்காளி சாதம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
தக்காளிப் பழம் - 4
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 1" துண்டு
பூண்டு - 8  பல்.
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை இலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எணணெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியைக் கழுவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்னர் களைந்து கொள்ளவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாகக் கீறி வைக்கவும்.

தக்காளி பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பை அணைத்து விடவும். சற்று நேரம் கழித்து, பழங்களை எடுத்து, தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்த சாற்றுடன் மொத்தம் 4 கப் வரும் அளவிற்கு  தண்ணீரைச் சேர்க்கவும்.

குக்கரை அடுப்பிலேற்றி அதில் எண்ணெயை விடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பட்டை இலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.

பின்னர் அதில் ஊற வைத்துள்ள அரிசியை, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு சேர்க்கவும். அரிசியைத் தொட்டால் சுடும் அளவிற்கு வரும் வரை கவனமாகக் கிளறி விடவும். பின்னர் அதில் தக்காளிச் சாற்றையும், எலுமிச்சம் சாற்றையும் சேர்த்துக் கிளறி மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டு, குக்கர் ஆறியதும், திறந்து கவனமாகக் கிளறி விடவும். கொத்துமல்லித்தழையைத் தூவி அலங்கரிக்கவும்.

வறுத்த முந்திரிப்பருப்பு, வேக வைத்தப் பட்டாணி ஆகியவற்றையும் இத்துடன் கலந்துப் பரிமாறலாம்.
 
தக்காளி சாதம் ரெடி.
 
ராஜப்பா
01-07-2012
12-10 பகல்

தக்காளி சாதம் நான் 12-6-2018 அன்று செய்தேன். முழுதும் கரியாகி விட்டது. அத்தனையும் வீண் !!!

மீண்டும், 24-6-2018 ஞாயிறு அன்று செய்தேன். நன்றாக, பிரமாதமாக வந்தது. ஆண்டவனுக்கு நன்றிகள்.


24-06-2018 Thakkali Saadam

தக்காளி சாதம் (பூண்டு, வெங்காயம் இல்லாமல்)

தக்காளி சாதம் (2-வது வகை).

இந்த சாதத்தில் , பூண்டு, வெங்காயம் இல்லை. அதிக காரமும் இல்லை.


தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
தக்காளிப் பழம் (நடுத்தர அளவு) - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க:

நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 6

செய்முறை:

தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 முதல் 6 விசில் வரும் வரை வேக விடவும்.

சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, நன்றாகக் கிளறி விடவும்.

ஒரு சின்ன வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.

ராஜப்பா
01-07-2012
பகல் 12:35 மணி

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...