Showing posts with label Puliyotharai. Show all posts
Showing posts with label Puliyotharai. Show all posts

01 April 2018

பார்த்தசாரதி பெருமாள் கோயில் புளியோதரை - Ver02

புளியோதரை

(திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் செய்முறை)

”தாயார் சன்னதியில் தரிசனம் முடித்துக்கொண்டு திரும்புகையில் மடைப்பள்ளிப் பிரசாதக் கடையில் சுறுசுறுப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல் கேட்டேன். தீர்ந்துவிட்டது என்றார்கள். புளியோதரை இருந்தது. வாங்கிக் கொண்டேன். ஒரு சிறிய தொன்னைப் புளியோதரை ஆறரை ரூபாய். ஆனால் அமிர்தம் தான். திருவல்லிக்கேணி கோவிலில் சர்க்கரைப் பொங்கல் தான் ரொம்ப விசேஷம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதைத் தூக்கியடிப்பதாக இருக்கிறது புளியோதரை. இதுவரை ருசிக்காதவர்கள் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்” - ரா.கி.ரங்கராஜன், (நாலுமூலை)


தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 5 கப்  ( 1 கிலோ)
நல்லெண்ணை – 50 மிலி (3 டேபிள்ஸ்பூன்)
மிளகு – 200 கிராம்
(மிளகு 200 கிராம் என்பது கொஞ்சம் அதிகம்தான்; தேவையான அளவு மிளகுப் பொடி போட்டுக்கொள்ளவும். மிளகுப் பொடி மட்டும்தான் காரத்திற்கு என்பதை நினைவில் கொள்க)

புளிக்காய்ச்சல் தயாரிக்க

புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 மிலி (6 டேபிள்ஸ்பூன்)
கடலைப் பருப்பு – 100 கிராம் ( 1/2 கப்)
உளுத்தம் பருப்பு – 100 கிராம் (1/2 கப்)
வெந்தயம் – 10 கிராம் (2 டீஸ்பூன்)
சீரகம் – 5 கிராம் (1 டீஸ்பூன்)
கடுகு – 10 கிராம் ( 2 டீஸ்பூன்)
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம் (2 டீஸ்பூன்)

செய்முறை:

புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.

புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.

எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.

பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.

2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

புளிநீர் பாதியாக வற்றும் வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]

மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.

சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.

பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

my thanks to Jayashree Govindarajan 

Rajappa
12 noon
16 March 2010

புளியோதரை - Ver01

புளியோதரை

நிறைய வீடுகளில் புளியோதரை எனப்படும் புளியஞ்சாதம், கலந்த சாதங்களில் ஒன்றாக செய்யப்படுகிறது. வெளியூருக்குப் போவதானாலும், சுற்றுலா செல்வதானாலும், சாப்பிட புளியோதரை மிகப் பொருத்தமாக அமையும். எனவேதான் ரயில் நிலையங்களில் கூட இது விற்கப்படுகிறது. எல்லாரும் மிக விரும்பி உண்ணும் உணவு இது. கோயில்களிலும் இது பிரசாதமாக தரப்படுகிறது.

புளியோதரை செய்வதற்கு பல முறைகள் உள்ளன. இரண்டை மட்டும் பார்ப்போம்::

எங்கள் வீட்டில் செய்யும் புளியோதரை.

புளிக்காய்ச்சல்.

தேவையானவை

புளி - 200 கி
வரமிளகாய் -15
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 50 கி
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 7 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம், கடுகு, மஞ்சள் பொடி, உப்பு, கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

ஒரு வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தனியா, வரமிளகாய் (8 மட்டும்), வெந்தயம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

இவைகளை மிக்சியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

கொஞ்சம் தண்ணீரில் புளியை ஊறவைத்து, கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, மீதியுள்ள 7 மிளகாய்(இரண்டாக கிள்ளிக்கொண்டு), கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

புளிக்கரைசலை இதில் சேர்க்கவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

எண்ணெய் பிரியும் வரை 30 நிமிஷங்களுக்கு, நன்கு கொதிக்க விடவும்.

பொடி செய்த தனியா, மிளகாயை சேர்க்கவும்.

புளிக்காய்ச்சல் தயார்.

சாதத்தை உதிர் உதிராக வடித்து, புளிக்காய்ச்சலை கலக்கவும். நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பொதுவாகவே அனைத்து வகைப் புளியோதரைகளும், கலந்து சிறிது நேரம் கழித்து பிறகு சாப்பிட்டால் ருசியாக இருக்கும். மறுநாள் என்றால் இன்னும் சுவையோடு இருக்கும்
 
ராஜப்பா
16-03-2010
1030 காலை

திருவல்லிக்கேணி பெருமாள் கோயில் புளியோதரை - செய்முறை இங்கு

ஆந்திரா புளிஹோரா சாப்பிட்டு இருக்கிறீர்களா? வேறே சுவை .. செய்முறை இதோ.

ஆந்திரா புளிஹோரா அன்னமு

ஆந்திரா: (புளிஹோரா அன்னமு)

பச்சரிசி – 1/2 கிலோ
நெய் அல்லது வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்

வறுத்துப் பொடிக்க

நல்லெண்ணை – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 12
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பெருங்காயம் – சிறிது

புளிக்காய்ச்சல் தயாரிக்க

புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தாளிக்க

நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை - 50 கிராம்
முந்திரிப் பருப்பு – 25 (விரும்பினால்)
வெந்தயம் – 2 டீஸ்பூன்
வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

மேலே வறுத்துப் பொடிக்க’க் குறிப்பிட்டுள்ள பொருள்களை வறுத்து, நன்றாகப் பொடிசெய்து கொள்ளவும்.

வாணலியில், தாளிக்கக் குறித்திருக்கும் பொருள்களை தாளித்து, அத்துடன் கெட்டியாகக் கரைத்த புளிக் கரைசலைச் சேர்க்கவும்.

உப்பு மஞ்சள் தூளுடன், அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும்.

உதிர் உதிராக சமைத்த சாதம், சூடாக இருக்கும்போதே வெண்ணை அல்லது நெய் சேர்த்து ஆறவிட வேண்டும்.

எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சாதத்தில் சேர்க்கவும்.

சாதம் ஆறியதும், புளிக்காய்ச்சலையும் தேவையான அளவு சேர்த்துக் கலக்க வேண்டும்.

thanks to Jayashree Govindarajan  here

Rajappa
1:30 PM
16 March 2010

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...