Showing posts with label Aviyal. Show all posts
Showing posts with label Aviyal. Show all posts

16 February 2018

AVIAL


AVIAL


Vazhaikkai,

Senai kizhangu,

Murungai kai,

Kaththari kai,

Carrot,

Poosani kai,

Urulai kizhangu,

Kothavarankai, 

Beans - 100 to 150 g each vegetable.

Pachchai Milakai, 8

Coconut, 1

Thayir (புளிக்காதது), 1/2 litre

Coconut oil, 50 g

Rice, 1 tsp, soaked in water

Karuveppilai, a little

Salt 2 teaspoon.



Cut all vegetables in length-wise pieces, and boil in a kadai.
Add a spoon of salt.
 Grate the coconut.
Grind coconut, Pachchai milakai, soaked rice into a paste.
Add this paste slowly to the vegetable.
Add thayir.
Add remaining salt.
Add karuveppilai.
Bring it to boil, and add coconut oil.
Switch off the stove.




Rajappa
17-07-2014


Prepared on 14-07-2018

_வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள் வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை:- அவை பேருக்கு ஒரு நிறமாகும்._
பாரதி பாடிய இப்பாடலே என் முன்னோடி -----


பச்சை நிறமொரு காய் -அது முருங்கை;
அதன் அடுத்து வெள்ளை நிறத்தில் பூசணி;
பின்னர் வெளிர் பச்சையில் பீன்ஸ், புடலை;
இச்சை கொள்ளும் மஞ்சளில் உருளை.

ஆரஞ்சு நிறத்தில் காரட்; அப்புறம், மஞ்சளில் சேனை;
சேனைக்கு உள்புறத்தில் மீண்டும் பச்சையில் மிளகாய், குடமிளகாய்;
கத்தரி நிறத்தில் ஆம் கத்தரிக்காயே; பக்கத்திலேயே வாழை;
வாசனைக்கு அதோ பார் பச்சை நிறத்தில் கறிவேப்பிலை.

எந்த நிறமிருந் தாலும் - அவை
யாவும் ஒரே தரமன்றோ?
இந்தக் காய் சிறி தென்றும், இது
ஏற்றமென்றும் சொல்லலாமோ?
அவியல் என்று கொட்டு முரசே - காய்கள்
அத்தனையும் வெந்த பின் நிகரே;
தேங்காய் எண்ணெய் ஊற்றி, தேங்காய்
அரைத்துப் போட்டால் - அவியல் மணக்கும் கண்டீர்.



02 March 2010

சேனைக்கிழங்கு YAM

சேனைக்கிழங்கு, SURAN (hindi), Kandha Gatta (telugu), Elephant Yam (English) என இது அறியப் படுகிறது.

சேனைக்கிழங்கு கறி (ரோஸ்ட்)
தேவையானவை
சேனைக்கிழங்கு 1 கிலோ
மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூன்
உப்பு,
தாளிக்க: 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், கடுகு,

சேனைக்கிழங்கின் உறுதியான, தடிமனான தோலை நீக்கவும்.

கிழங்கை நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

சிறிய சதுரங்களாக (small cubes) நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.

கடுகு வெடித்தவுடன், அலம்பிய கிழங்கை போடவும்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

வாணலியை மூடி வைத்து கிழங்கை மிதமான தீயில் வேகவைக்கவும். (தண்ணீர் ஊற்றக் கூடாது.

சில கிழங்குகள் சீக்கிரமாகவும், சில கிழங்குகள் தாமதமாகவும் வேகும்.
வெந்ததும், மூடியை எடுத்து விட்டு, கிழங்கு மொறுமொறுப்பாகும் வரை (CRISP) வதக்கவும்.

கறி ரெடி

சேனைக்கிழங்கு வறுவல்

ஒரு கிலோ சேனைக்கிழங்கை தோல் நீக்கி, சிறிய சதுரங்களாக (Cubes) நறுக்கி, நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

ஒரு பெரிய நியூஸ்பேப்பரில் துண்டங்களை கொட்டி, உலர விடவும்.

மிளகாய்த்தூள் 4 டீஸ்பூன், உப்பு 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.


வாணலியில் 500 கிராம் எண்ணெயை சூடாக்கி, இரண்டு கைப்பிடி துணடங்களை போடவும்.

துண்டங்கள் பொரிந்ததும், எடுத்து டிஷ்யூ பேப்பரில் போடவும். எண்ணெய் வடிந்ததும், துண்டங்களில் மிளகாய் தூள் + உப்பு கலவையை சிறிது தூவவும்.

காற்றுப் புகாத பாத்திரத்தில் போடவும்.

இதே போன்று எல்லாக் கிழங்கையும் கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுத்து, மிளகாய், உப்பு தூவி, பாத்திரத்தில் போடவும்.

கடைசியில் பாத்திரத்தை நன்கு குலுக்கி, மிளகாய் தூள் உப்பு சமமாக பரவும்படி செய்யவும்.

வறுவல் ரெடி

c. சேனைக்கிழங்கு அவியலில் போட மிகச் சிறந்த காய்.


ராஜப்பா
11:30 காலை
02-03-2010

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...