Showing posts with label Toor Dal. Show all posts
Showing posts with label Toor Dal. Show all posts

05 April 2018

Bisi Bele Baath Tamilnadu Style

பிஸி பேளே பாத்

தேவையானவை
அரிசி - 400 கிராம்
துவரம் பருப்பு - 200 கிராம்
கொப்பரைத் துருவல், 2 டேபிள்ஸ்பூன்
புளி, எலுமிச்சம் பழ அளவு
உப்பு,
கருவேப்பிலை, சிறிது
நெய், 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன்


வறுத்து அரைக்க
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேஸ்பூன்
வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் (சிகப்பு), 10 - 12
பட்டை, சிறிது
கிராம்பு, 3

காய்கறிகள்:
சின்ன வெங்காயம், 100 கிராம், உருளைக்கிழங்கு, காரட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், தலா 50 கிராம், முருங்கைக்காய் (1)

செய்முறை

1. வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு முதலானவைகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் கொப்ப்ரை துருவல், 5 சின்ன வெங்காயம் (பச்சையாக) சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
3. குக்கரில் சாதத்தை செய்து கொள்ளவும்.
4. இன்னொரு குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கவும்.
5. புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும்.
6. புளித்தண்ணீரில் காய்கறிகளைப் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை மட்டும் எண்ணெயில் கொஞ்சம் வதக்கி வேக விடவும்.
7. அரைத்து வைத்துள்ள விழுதை இதில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் அணைத்து விடவும்.
8. ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் சாதத்தைக் கொட்டி, பருப்பை சேர்த்து, தேவையான் உப்பு போட்டு, நன்றாக கலந்து கொள்ளவும்.
8. வெந்த காய்கறி கலவையை கொட்டி கிளறவும்.
9. நெய்யை காய்ச்சி ஊற்றவும்.
10. கொஞ்சம் எண்ணெயில் கருவேப்பிலையை தாளித்து, சாதத்தில் போடவும்.



பிஸி பேளே பாத் தயார்

ராஜப்பா
12:20 Pm
1-2-2010

01 April 2018

Paruppu Saadam --- (Ramesh)

PARUPPU SAADAM

தேவையான பொருட்கள்

அரிசி – 200 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்

உரித்த சின்ன வெங்காயம் – 10 – 12
கறிவேப்பிலை – கொஞ்சம்
உரித்த பூண்டு – 10 – 12
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் – 7
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்;
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

1. குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, பூண்டை இளஞ் சிவப்பாக வதக்கவும்.

2. அதிலேயே சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.

3. கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும்.

4. இளஞ் சிவப்பாக மாறியதும், 4 கப் தண்ணீரும், உப்பும் சேர்க்கவும்.

5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அலம்பிய துவரம் பருப்பையும், அரிசியையும் சேர்க்கவும்.

6. நன்றாக கலக்கி மூடிவைக்கவும்.

7. அனலைக் குறைத்து, குக்கரின் வெயிட் (weight) போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் வேகவைக்கவும்.

8. மூடியை திறந்ததும், உருக்கிய நெய்யையும், தேங்காய் எண்ணையையும் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.

சமீபத்தில் சென்னைக்கு வந்த போது ரமேஷ் சொன்ன ஒரு புதிய சாதம். செய்து பாருங்கள், சுவை பிரமாதமாக இருக்கிறது.

Ramesh
30-12-2007
12:05 PM
ராஜப்பா

14 February 2018

பொடி போட்ட குழம்பு / சாம்பார்

5 பேருக்கான குழம்பு. பொடி போட்ட குழம்பு.

வெண்டைக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், பூசணி, பரங்கி, அவரைக்காய்,  ஏதேனும் ஒரு காய் - 200 கிராம்

செய்முறை

காயை நன்கு அலம்பி, நறுக்கிக் கொள்ளவும்.

100 கிராம் துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும்.

இதில் காயை போட்டு, உப்பு,  சாம்பார்ப் பொடி (செய்முறை இங்கே)   2 டீஸ்பூன் போட்டு, 12-15 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.

வெந்த துவரம்பருப்பை சேர்த்து, 3 நிமிஷம் கொதிக்க விடவும்.

கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

கறிவேப்பிலை போட்டு, அடுப்பை அணைக்கவும்.



ராஜப்பா
4:40 மாலை
24-02-2010

அரைத்து விட்ட சாம்பார் Sambhar

அரைத்து விட்ட சாம்பார். (5 பேர் சாப்பிடலாம்)

ஏதேனும் ஒரு காய்  (முருங்கைக் காய், சின்னவெங்காயம், வெண்டைக்காய், கத்தரிக்காய், Capsicum, பூசணி, பரங்கிக்காய்).

துவரம்பருப்பு, 150 கிராம்.

புளி, எலுமிச்சம் பழ அளவிற்கு

கடுகு, உளுத்தம்பருப்பு --- ஒவ்வொன்றும்  1/2 டீஸ்பூன் அளவு.

உப்பு, தேவையான அளவு.

செய்முறை  

காயை நன்கு அலம்பி, நறுக்கிக் கொள்ளவும்.

துவரம் பருப்பை குக்கரில் வேக வைக்கவும்.

புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்துக் கொள்ளவும்.

புளித்தண்ணீரில் காயைப் போட்டு, உப்பு சேர்த்து, 12-15 நிமிஷங்கள் வேக விடவும்.

சாம்பாருக்கான அரைத்த மசாலா விழுதை (செய்முறை இங்கே) போட்டு கொதிக்க விடவும்.

வெந்த து. பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.

கருவேப்பிலை சேர்த்த பின்னர், அடுப்பை அணைக்கவும்.

இது முருங்கைக்காய் சாம்பார்

ராஜப்பா
1:00 PM
24 Feb 2010

13-05-2018
BHENDI Sambar

09 February 2018

Paagarkkai Pitlai

பாகற்காய் பிட்ளை


காயை அலம்பி, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு தாளித்து, காயை போடவும்.

ஒரு கைப்பிடி கடலைப்பருப்பை சேர்த்து வதக்கவும்.

கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

காய் வெந்ததும், கறிப்பொடியை 3 1/2 டீஸ்பூன் போடவும்.

3 பிடி துவரம்பருப்பை தனியாக வேகவைத்து, காயுடன் போடவும்.

ஒரு கொதி வந்தவுடன், இறக்கி விடவும்.

கறிப்பொடி

தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு 1 டீஸ்பூன், 6 வரமிளகாய், இவற்றுடன் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.



06 JUNE 2018




PITLAI 22 JUNE 2018














04 February 2018

பருப்பு ரசம்

பருப்பு ரசம்

துவரம்பருப்பு, 40 கிராம், for 2 persons 
புளி எலுமிச்சம்பழ அளவு
தக்காளி, பெரியது 1 பொடியாக நறுக்கியது
பெருங்காயம், சிட்டிகை
உப்பு, மஞ்சள் தூள், கடுகு, ஜீரகம்

செய்முறை

துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
3 விசில், பிறகு கொஞ்ச நேரம் சிம்மரில்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்துக் கொள்ளவும்.
புளித்தண்ணீரில், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், ரசப்பொடி (செய்முறை இங்கே) 3 டீஸ்பூன், நறுக்கிய தக்காளி ஆகியவற்றைப் போட்டு, 12-15 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
வெந்த துவரம்பருப்பை சேர்த்து, 3 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
மிளகு, ஜீரகம் பொடி போடவும்
பின்னர், கடுகு தாளிக்கவும் (நெய்யில்).
அடுப்பை அணைத்துவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி போடவும்.


ராஜப்பா
https://sampoornamvilas.blogspot.com/2018/02/sambar-rasam-podi.html

22-6-2018 அன்று, ரசம் நான் பண்ணினேன்.



DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...