Showing posts with label Hyderabad. Show all posts
Showing posts with label Hyderabad. Show all posts

04 December 2017

Mirchi Bajji Hyderabad

மிர்ச்சி பஜ்ஜி (ஹைதராபாதில் கிடைப்பது)

தெலுங்கில் “மிரப்பகாயா பஜ்ஜி” எனவும், தமிழில் “மிளகாய் பஜ்ஜி” எனவும் அழைக்கப்படும் இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

சென்னையிலும், பெங்களூரிலும் கிடைக்கும் “மிளகாய் பஜ்ஜி” அல்ல. இது ஹைதராபாத் புகழ் மிர்ச்சி பஜ்ஜி.



தேவையான பொருட்கள்:
மிளகாயில் அடைக்க (to be stuffed inside Mirchi)

எள் – 3 டேபிள் ஸ்பூன்
கொப்பரைத் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி விதை (தனியா) – 1 டீஸ்பூன்
புளி (கரைத்தது) – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
புளியைத்தவிர மற்ற மூன்றையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். புளி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் (தண்ணீர் விடாமல்)விழுதாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

மிளகாய் செய்முறை.

சுமார் 15-20 மிளகாய்களை எடுத்துக் கொண்டு (ஹைதராபாதில் பஜ்ஜி மிளகாய் என்றே கிடைக்கும்), நன்கு கழுவி, துடைத்துக் கொள்ளவும்.

மிளகாயின் நடுவில் நீளவாக்கில் கூரான கத்தியினால் கீறிக்கொள்ளவும். மிளகாயின் காம்பு பகுதியையும், கீழ்பகுதியையும் நறுக்கக் கூடாது.

கீறிய பின், மிளகாயின் உள்ளே இருக்கும் “நரம்பு” பகுதியையும் விதைகளையும் எடுத்து விடவும். எல்லா மிளகாய்களையும் இவ்வாறே கீறி, விதைகளை எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள எள் விழுதை கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு மிளகாயினுள்ளும் அடைக்கவும். (stuff)

பஜ்ஜி மாவு:

கடலை மாவு (Besan)- 2 கப், சலித்தது
அரிசி மாவு – 1/2 கப்
உப்பு, சீரகம், ஓமம், சமையல் உப்பு - கொஞ்சம்
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் லேசாக் கலந்து, கெட்டியாக (பஜ்ஜி மாவு பதத்தில்) கரைத்துக் கொள்ளவும்

பஜ்ஜி போட்டு எடுக்க:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கவும் (புகை வரும் நிலையில்). ஒவ்வொரு மிளகாயாக எடுத்து, மாவில் தோய்த்து, எண்ணெயில் மெதுவாக போடவும். பொன்னிறமாக பொரிய வேண்டும்.

ஒரு “ஈடு” ஆனதும், அந்த பஜ்ஜிகளை அடுத்த “ஈடு” வரை ஆறவிட்டு, பின்னர் மீண்டும் மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரிய விடவும். இதே போன்று எல்லா பஜ்ஜிகளையும் இரண்டு முறை மாவில் தோய்த்து, எண்ணெயில் பொரிக்கவும்.

சுவையான ஹைதராபாத் மிர்ச்சி பஜ்ஜி தயார். சூடாக சாப்பிடவும்.

ராஜப்பா
மாலை 6-20; 20-03-2009

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...