Showing posts with label Elephant YAM. Show all posts
Showing posts with label Elephant YAM. Show all posts

11 January 2018

சேனைக் கிழங்கு கறி

சேனைக்  கிழங்கு கறி


  • சேனைக் கிழங்கை தோல் சீவிக் கொள்ளவும்.
  • கிழங்கை நன்றாக அலம்பிக் கொள்ளவும்.
  • சின்ன சின்ன துண்டங்களாக நறுக்கவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு போடவும்.
  • கிழங்கை போடவும்.
  • உப்பு, மஞ்சள் பொடி போடவும்.
  • தண்ணீர் தெளித்து 15-20 நிமிஷங்கள் வேக விடவும்.
  • காய் வெந்தவுடன், 1 டீஸ்பூன் சாம்பார் பொடி போடவும். நன்கு கிளறி விடவும்.
  • 3 நிமிஷம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
ரெடி






6-6-2018

02 March 2010

சேனைக்கிழங்கு YAM

சேனைக்கிழங்கு, SURAN (hindi), Kandha Gatta (telugu), Elephant Yam (English) என இது அறியப் படுகிறது.

சேனைக்கிழங்கு கறி (ரோஸ்ட்)
தேவையானவை
சேனைக்கிழங்கு 1 கிலோ
மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூன்
உப்பு,
தாளிக்க: 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், கடுகு,

சேனைக்கிழங்கின் உறுதியான, தடிமனான தோலை நீக்கவும்.

கிழங்கை நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

சிறிய சதுரங்களாக (small cubes) நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.

கடுகு வெடித்தவுடன், அலம்பிய கிழங்கை போடவும்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

வாணலியை மூடி வைத்து கிழங்கை மிதமான தீயில் வேகவைக்கவும். (தண்ணீர் ஊற்றக் கூடாது.

சில கிழங்குகள் சீக்கிரமாகவும், சில கிழங்குகள் தாமதமாகவும் வேகும்.
வெந்ததும், மூடியை எடுத்து விட்டு, கிழங்கு மொறுமொறுப்பாகும் வரை (CRISP) வதக்கவும்.

கறி ரெடி

சேனைக்கிழங்கு வறுவல்

ஒரு கிலோ சேனைக்கிழங்கை தோல் நீக்கி, சிறிய சதுரங்களாக (Cubes) நறுக்கி, நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

ஒரு பெரிய நியூஸ்பேப்பரில் துண்டங்களை கொட்டி, உலர விடவும்.

மிளகாய்த்தூள் 4 டீஸ்பூன், உப்பு 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.


வாணலியில் 500 கிராம் எண்ணெயை சூடாக்கி, இரண்டு கைப்பிடி துணடங்களை போடவும்.

துண்டங்கள் பொரிந்ததும், எடுத்து டிஷ்யூ பேப்பரில் போடவும். எண்ணெய் வடிந்ததும், துண்டங்களில் மிளகாய் தூள் + உப்பு கலவையை சிறிது தூவவும்.

காற்றுப் புகாத பாத்திரத்தில் போடவும்.

இதே போன்று எல்லாக் கிழங்கையும் கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுத்து, மிளகாய், உப்பு தூவி, பாத்திரத்தில் போடவும்.

கடைசியில் பாத்திரத்தை நன்கு குலுக்கி, மிளகாய் தூள் உப்பு சமமாக பரவும்படி செய்யவும்.

வறுவல் ரெடி

c. சேனைக்கிழங்கு அவியலில் போட மிகச் சிறந்த காய்.


ராஜப்பா
11:30 காலை
02-03-2010

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...