Showing posts with label Varuval. Show all posts
Showing posts with label Varuval. Show all posts

11 January 2018

சேனைக்கிழங்கு வருவல்


SENAIKKIZHANGU   VARUVAL

சேனைக்கிழங்கு ---- 1 கிலோ

எண்ணெய் ----- 1/4 கிலோ

மிளகாய்ப் பொடி ---- 3 டீஸ்பூன்

உப்பு  ----- தேவையான அளவு.

கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டங்களாக நறுக்கவும்.

துண்டங்களை இரண்டு, மூன்று முறை தண்ணீரில் மண் போக அலம்பவும்,

அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கவும்.

சூடானதும், துண்டங்களை எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரிக்கவும். வறுவலை ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு, எண்ணெய் வடிந்ததும். ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

மிளகாய் பொடி, உப்பு இதில் போட்டு நன்கு கலக்கவும் (Mix Well).
Rajappa
17-07-2014

சேனைக்கிழங்கு வறுவல்


  • 1/2 கிலோ சேனைக்கிழங்கை அலம்பி, தோல் சீவி, மீண்டும் அலம்பி சின்ன சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.கிழங்கை மீண்டும் running waterல் அலம்பி, தண்ணீரை இருத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • கொதித்த தண்ணீரில் கிழங்கு துண்டுகளை போட்டு 10 நிமிஷம் அதில் இருக்கட்டும்.
  • தண்ணீரை வடித்து விட்டு கிழங்கை ஆறப் போடவும்.
  • ஒரு பாத்திரத்தில் கீழ்க்கண்டவைகளை போடவும்: 
  1. 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  2. 2 டேஸ்பூன் அரிசி மாவு
  3. உப்பு 1 டீஸ்பூன்
  4. மிளகாய் பொடி 1 டீஸ்பூன்
  5. பெருங்காயம் சிட்டிகை
  6. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  • இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
  • வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கிழங்கு துண்டங்களையும் மேற்சொன்ன கலவையையும் போட்டு, பிசறிக் கொள்ளவும். கிழங்கிலேயே தண்ணீர் இருக்குமாதலால் மறுபடியும் நீர் சேர்க்க வேண்டாம்.
  • பத்து நிமிஷம் இருக்கட்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், துண்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
சேனைக்கிழங்கு வறுவல் ரெடி.

ராஜப்பா
15-06-2013


இன்று காலை நாங்கள் இதை செய்து சாப்பிட்டோம்.


19 September 2010

வாழைக்காய்

வாழைக்காயை பல விதமாக சமைக்கலாம்.

வாழைக்காய்களை தோல் சீவி, துண்டங்களாக் நறுக்கிக் கொண்டு, தண்ணீரில் போடவும். கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். பாதி வெந்தால் கூட போதும். தண்ணீரை இறுத்து விடவும்.

உளுத்தம்பருப்பு, மிளகு, வரமிளகாய் ஆகியவற்றை (எண்ணெயோ, தண்ணீரோ விடாமல்) வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெந்த வாழைக்காயை போடவும். அரைத்த பொடியையும் போடவும்.

காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பருப்பு அரைத்த கறியாகவும், பொடி தூவிய கறியாகவும் செய்யலாம்.

வாழைக்காய் பொடி.
(மீனாக்ஷி அம்மாள், பகுதி 01)

வாழைக்காய்களை முழுதாகவோ, இரண்டாக நறுக்கியோ கொஞ்சமாக புளி கரைத்த நீரில் வேக விடவும். அல்லது நல்ல தணலில் காயை தோலுடன் போட்டு தோல் கருக சுட்டு எடுத்து உரித்துக் கொள்ளவும்.

3 காய்களுக்கு தேவையானவை :: மிளகாய் வற்றல் 6 - 8; துவரம் பருப்பு 2 டீஸ்பூன், உ.பருப்பு 2 டீஸ்பூன்கள், கடுகு தாளிக்க, பெருங்காயம் சிறிது.

வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் மேற்சொன்ன சாமான்களை போட்டு சிவக்க வறுக்கவும். மிக்ஸியில் வறுத்த சாமான்களை போட்டு, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும்.

உரித்து வைத்துள்ள வாழைக்காயை உதிர்த்து மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.


வாழைக்காய் பொரியல்.
(நன்றி: காயத்ரி வெங்கட், அவரது பதிவிலிருந்து)
















தேவையானவை


வாழைக்காய்- 1
சாம்பார்பொடி- 2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு


1. வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும்.

2. பிடித்த வடிவத்தில் வாழைக்காயைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

3. அடுப்பில் எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிதம் செய்து கொண்டு கடுகு வெடித்தவுடன் சீரகத்தைப் போட்டு வதக்கி விடவும்.

4. வாழைக்காய் துண்டுகளை தாளித்தவற்றுடன் போட்டு உப்பு போட்டு 1/4 டம்ளர் நீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும்.

5. பாதி வெந்ததும் சாம்பார்பொடி, பெருங்காயம் சேர்த்து திறந்து வைத்துக் கிளறி வரவும். அடிப்பிடிக்காமல் இருக்க எண்ணெய் ஊற்றவும்.

6. வறுவலாகத் தயாரானதும் அடுப்பை அணைத்து விட்டு பொரியலை வேறு பாத்திரத்திற்கு மாற்றிப் பரிமாறவும்.



RAW BANANA GRILL
(JAYASHREE VENKAT, New Delhi, 18-09-2010)

INGREDIENTS
Raw Banana - 2
Cashew nut paste - 3 tbsp
Green chilli paste - 1 tbsp
Fresh Cream - 1 tbsp
Hung curd - 2 tbsp
Cardamom powder - 1 tbsp
Crushed peppercorn - 1 tbsp
Salt - To taste


METHOD
Peel the raw bananas and cut it into three pieces. Boil and keep aside.


Mix cashew nut paste, cardamom powder, green chilli paste, cream, hung curd and salt together.


Now, marinate the banana with the above mixture.


Keep it for few minutes and then, cook it in a tandoor for about five minutes.


Serve hot.


வாழைக்காய் பிரட்டல்

1. வாழைக்காய்களை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் தண்ணீரில் போடவும். கொஞ்சம் மஞ்சள்தூளையும் சேர்த்து வேக விடவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிப்பை சேர்த்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

3. மிளகாய்த்தூளை தண்ணீரில் கலந்து் இதில் ஊற்றி, வேக வைத்த வாழைக்காய்களை போடவும்.

5. உப்பை சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.

வாழைக்காய் பிரட்டல் ரெடி.


வாழைக்காய் வறுவல்.

வாழைக்காய்களை தோல் சீவி, வட்ட வட்ட  வில்லைகளாக சீவிக் கொள்ளவும். வ்றுவல்-சீவியிலும் சீவிக்கொள்ளலாம்.

ஈரம் போக உலர்த்திக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், வாழைக்காய் சீவல்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

பேப்பர் டிஷ்யூவில் வைத்து எண்ணெய் போக வைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மிளகாய்த் தூள் கலவையை பிசிறவும்.

இதே போன்று எல்லா சீவல்களையும் ஈடு-ஈடாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.




ராஜப்பா






02 March 2010

சேனைக்கிழங்கு YAM

சேனைக்கிழங்கு, SURAN (hindi), Kandha Gatta (telugu), Elephant Yam (English) என இது அறியப் படுகிறது.

சேனைக்கிழங்கு கறி (ரோஸ்ட்)
தேவையானவை
சேனைக்கிழங்கு 1 கிலோ
மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூன்
உப்பு,
தாளிக்க: 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், கடுகு,

சேனைக்கிழங்கின் உறுதியான, தடிமனான தோலை நீக்கவும்.

கிழங்கை நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

சிறிய சதுரங்களாக (small cubes) நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.

கடுகு வெடித்தவுடன், அலம்பிய கிழங்கை போடவும்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

வாணலியை மூடி வைத்து கிழங்கை மிதமான தீயில் வேகவைக்கவும். (தண்ணீர் ஊற்றக் கூடாது.

சில கிழங்குகள் சீக்கிரமாகவும், சில கிழங்குகள் தாமதமாகவும் வேகும்.
வெந்ததும், மூடியை எடுத்து விட்டு, கிழங்கு மொறுமொறுப்பாகும் வரை (CRISP) வதக்கவும்.

கறி ரெடி

சேனைக்கிழங்கு வறுவல்

ஒரு கிலோ சேனைக்கிழங்கை தோல் நீக்கி, சிறிய சதுரங்களாக (Cubes) நறுக்கி, நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

ஒரு பெரிய நியூஸ்பேப்பரில் துண்டங்களை கொட்டி, உலர விடவும்.

மிளகாய்த்தூள் 4 டீஸ்பூன், உப்பு 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.


வாணலியில் 500 கிராம் எண்ணெயை சூடாக்கி, இரண்டு கைப்பிடி துணடங்களை போடவும்.

துண்டங்கள் பொரிந்ததும், எடுத்து டிஷ்யூ பேப்பரில் போடவும். எண்ணெய் வடிந்ததும், துண்டங்களில் மிளகாய் தூள் + உப்பு கலவையை சிறிது தூவவும்.

காற்றுப் புகாத பாத்திரத்தில் போடவும்.

இதே போன்று எல்லாக் கிழங்கையும் கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுத்து, மிளகாய், உப்பு தூவி, பாத்திரத்தில் போடவும்.

கடைசியில் பாத்திரத்தை நன்கு குலுக்கி, மிளகாய் தூள் உப்பு சமமாக பரவும்படி செய்யவும்.

வறுவல் ரெடி

c. சேனைக்கிழங்கு அவியலில் போட மிகச் சிறந்த காய்.


ராஜப்பா
11:30 காலை
02-03-2010

01 March 2010

பீர்க்கங்காய் Ridge Gourd

பீர்க்கங்காய் (தமிழ்), பீரக்காயா (தெலுங்கு), Toorai (ஹிந்தி) , Ridge Gourd (ஆங்கிலம்) என இது அறியப்படுகிறது.

மருத்துவ விசேஷங்கள்:
பீர்க்கங்காயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் அறவே கிடையாது. நார்சசத்து, விட்டமின் C, Riboflavin, Zinc, thiamin, iron, magnesium, manganese சத்துக்கள் நிரம்பியது. குளிர்ச்சியானது.

இனி சில பீர்க்கங்காய் சமையல்களை பார்ப்போமா?

முதலில், பீர்க்கங்காய் கூட்டு

பீர்க்கங்காயை நன்கு அல்ம்பி, லேசாக தோல் சீவிக் கொள்ளவும்.
சதுரங்களாக CUBES நறுக்கிக் கொள்ளவும்.

PEERKAN KAI cut for Koottu

குக்கரில் 50 கிராம் பயத்தம்பருப்பு, காய், மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள்,  கொஞ்சம் உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

குக்கர் ஆறியதும் 1/2 டீஸ்பூன் ஜீரகம், சிட்டிகை பெருங்காயம் போட்டு கலக்கவும்.

இன்னொரு சிறிய வாணலியில் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 வரமிளகாய் தாளிக்கவும்.

22-06-2018 We made this KOOTTU

கூட்டு ரெடி

அடுத்து, பீர்க்கங்காய் துகையல்.
லேசாக தோல் சீவி, காயை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 3 வரமிளகாய் இவற்றை சிவக்க வறுக்கவும். வறுத்ததை தனியாக எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பீர்க்கங்காயை வதக்கவும்.

வறுத்த உ-பருப்பு, மிளகாயை சிறிது புளி சேர்த்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். வதக்கின காயை மிக்சியில் போட்டு, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். பீர்க்கங்காயில் தண்ணீர் சத்து நிரம்ப இருப்பதால் தனியாக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

சாதத்தில் பிசைந்து சாப்பிட துகையல் ரெடி.

அடுத்து, பீர்க்கங்காய் புளிக்குழம்பு.

லேசாக தோல் சீவி காயை நறுக்கிக் கொள்ளவும்.
நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைக்கவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், 2 பச்சை மிளகாய் (கீறிக்கொள்ளவும்), தாளிக்கவும்.

காயை இதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

புளியை கரைத்து ஊற்றி, 1 ஸ்பூன் சாம்பார் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

புளி வாசனை போனதும் 1/2 ஸ்பூன் அரிசி மாவு கரைத்து ஊற்றவும். சிறிது வெல்லம் சேர்க்கவும்.

புளிக்குழம்பு ரெடி.

கடைசியாக, பீர்க்கங்காய் வறுவல்.

காயை தோலுடன் வில்லைகளாக் நறுக்கிக் கொள்ளவும்.

1 டீஸ்பூன் மிளகாய் பொடியுடன், கொஞ்சம் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

கலவையை காய் வில்லைகளில் பிசறி வைத்துக் கொள்ளவும்

200 கிராம் எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.

3 டீஸ்பூன் அரிசி மாவை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, வில்லைகளை இதில் லேசாக பிரட்டிக் கொண்டு, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

ராஜப்பா
10:30 காலை
01-03-2010

On 22 June 2018 we made this Kootu

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...