Showing posts with label Mulai Keerai. Show all posts
Showing posts with label Mulai Keerai. Show all posts

14 January 2018

Keerai Soup

கீரை ஸூப்


மீடியம் சைஸ் முளைக்கீரை கட்டில் பாதியை எடுத்து, அலம்பி நறுக்கி. கொள்ளவும். ஒரு நூல்கோலில் பாதி மற்றும் 10 பீன்ஸ்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 6 பல் பூண்டை உரித்து, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கைப்பிடி பயத்தம்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில், ஊறவைத்த பருப்பு, கீரை, காய்கள், பூண்டு ஆகியவற்றை போட்டு, தண்ணீரில் வேக விடவும்.

ஒரு மீடியம் சைஸ் காரட்டை தோல் சீவி, அலம்பி, துருவி, தண்ணீரில் 4 நிமிஷம் தனியாக வேகவிடவும்.

ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி, இன்னொரு வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு, அதில் வெங்காயத்தை வதக்கவும். ஒரு தக்காளி பழத்தை கொதிநீரில் 3 நிமிஷம் போட்டு, தோலை எடுத்துவிடவும். தக்காளிப்பழம், பின்னர் வதக்கிய வெங்காயம், பின்னர் கீரை, பயத்தம்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொண்டு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் ஏற்றவும். தேவையான் அளவு உப்பு போடவும்.

இது கொதிக்க ஆரம்பிக்கும்போது, வேகவைத்த காரட் துருவலை கொட்டி, சிறிய தீயில் 10-12 நிமிஷம் கொதிக்க விடவும். நடுவில், முக்கால் ஸ்பூன் வெண்ணையை சேர்க்கவும். 12 நிமிஷம் கொதித்தபின்னர் முக்கால் கப் பாலை சேர்க்கவும்; இன்னும் 2 நிமிஷங்கள் கொதித்தபின், தேவையான் மிளகுப் பொடி போடவும்.

அடுப்பிலிருந்து இறக்கி, ஸூப்பை சூடாக பரிமாறவும்.

ராஜப்பா
15-11-2008 7-45PM

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...