Showing posts with label Orange Pazha Thol. Show all posts
Showing posts with label Orange Pazha Thol. Show all posts

15 February 2018

Orange Pazha Thol Kuzhambu

ஆரஞ்சு பழத் தோல் குழம்பு.


எங்கள் வீட்டில் ஆரஞ்சுப் பழம் வாங்கினால், பழத்தை சாப்பிட்ட பின்னர் அந்த் தோலை தூக்கி எறிய மாட்டோம். தோலையும் குழம்பு பண்ணி சாப்பிடுவோம் = செய்முறை இதோ

தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி. கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளிக்கவும்.

அடுத்து, 4 பச்சை மிளகாய்களை சிறிதாக நறுக்கி, அதையும், ஆரஞ்சு தோலையும் வாணலியில் போட்டு வதக்கவும். புளி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

சிறிது மஞ்சள் பொடி சேர்க்கவும்.

திக்காக ஆகும்வரை கொதிக்கட்டும். கடைசியில் கொஞ்சம் வெல்லம் போடவும். பின்னர் இறக்கி விடலாம்.

இனிப்பு, புளிப்பு,உறைப்பு கலந்த இந்த ஆரஞ்சு பழ தோல் குழம்பு மிக சுவையாக இருக்கும்.

rajappa
23-11-2013
11:00 AM

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...