Showing posts with label sumangali Prarthanai. Show all posts
Showing posts with label sumangali Prarthanai. Show all posts

22 January 2010

Sumangali Prarthanai Samaiyal

நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம்.

5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண்டும். இந்த 5 பேர்களில் வீட்டுப் பெண்களையும் சேர்க்க வேண்டும்; வெளி ஸ்தீரிகளையும் சேர்க்கலாம். இந்த ஆறு பேரோடு ஒரு ஸ்வாமி இலையையும் சேர்த்து மொத்தம் ஏழு இலைகள் முதலில் போட வேண்டும்.

சுமங்கலிகளையும் கன்யாப் பெண்ணையும் முதலில் உட்கார வைத்து பரிமாறும்போது, ஸ்வாமி இலையிலும் பரிமாற வேண்டும், ஆனால் அதில் அப்போது யாரும் உட்காரக் கூடாது. சுமங்கலிகள் சாப்பிட்ட பிறகு, வீட்டில் உள்ள சுமங்கலி யாரேனும் (நாட்டுப் பெண்கள், பெரியம்மா, சித்தி போன்றோர்) உட்காரலாம்.

[”சமைத்துப் பார்” - எஸ் மீனாக்ஷி அம்மாள் எழுதியது - பாகம் 3 பக்கம் 216-ல் மிக விவரமாக சொல்லப்பட்டுள்ளது]

தேவையான பொருட்கள்: 30 பேருக்கு

மஞ்சள் பொடி – 50 கி
அரிசி – 5 கிலோ
துவரம் பருப்பு – 1 1/2 கிலோ
கடலைப்பருப்பு – 1 கிலோ
உளுத்தம் பருப்பு – 3/4 கிலோ
பயத்தம் பருப்பு – 1/2 கிலோ
மிளகாய் வத்தல் – 1/4 கிலோ
தனியா – 1/4 கிலோ
புளி – 1/4 கிலோ
வெல்லம் – 2 கிலோ
நல்லெண்ணெய் – 1/2 கிலோ
ரீஃபைண்ட் எண்ணெய் – 1 1/2 கிலோ (சமையல் எண்ணெய்)
வெண்ணெய் – 3/4 கிலோ
கடுகு – 50 கி
மிளகு – 50 கி
சீரகம் – 50 கி
வெந்தயம் – 50 கி
மிளகாய்த்தூள் – 50 கி
மைதா மாவு – 1 கிலோ
சாதா உப்பு – 1 கிலோ (டாட்டா உப்பு)
சர்க்கரை – 1 1/2 கிலோ
காஃபி பவுடர் – 1/2 கிலோ (தேவையைப் பொறுத்தது)
பால் – தயிர் தோய்ப்பதற்கு – 5 லிட்டர்
பால் – காஃபி, டீ – 5 லி

கறிகாய்கள்

வாழைக்காய் – 8
அவரைக்காய் – 1 கிலோ
பூசணிக்காய் – 3/4 கிலோ
தக்காளிப்பழம் – 2 கிலோ
வெண்டைக்காய் – 1/2 கிலோ
மாங்காய் – பெரியதானால் 4, சின்னதானால் 6
வெள்ளரிக்காய் – 1/4 கிலோ
பச்சைமிளகாய் – 1/2 கிலோ
இஞ்சி – 1/4 கிலோ

வாழையிலை – நுனி இலை 30

சுமங்கலிப் ப்ரார்த்தனை சமையல்

பாயஸம் (தேங்காய் அல்லது கடலைப்பருப்பு)
உளுந்து வடை
பருப்பு. போளி
தித்திப்பு பச்சடி
தயிர் பச்சடி
பயத்தம் பருப்பு கோசுமல்லி
பழங்கள் ஸாலட்
வாழைக்காய் கறி
அவரைக்காய் கறி
சௌசௌ / பூசணிக்காய் / புடலங்காய் கூட்டு
தேங்காய் துகையல் (அல்லது) கொத்தமல்லி துகையல்
கலந்த சாதம் (தேங்காய், எலுமிச்சை, புளியஞ்சாதம் – ஏதாவது ஒன்று))
மாங்காய் ஊறுகாய்
பருப்பு
நெய்
வெண்டைக்காய் சாம்பார் (அல்லது கத்தரிக்காய் ரசவாங்கி)
பூசணி (அல்லது வேறு ஏதேனும் நாட்டுக் காய்) மோர்க்குழம்பு
தக்காளி ரசம்
தயிர்

பானகம்
நீர்மோர்
சுக்கு வெல்லம்

இன்னும் தேவையான சில பொருட்கள்
நிறைகுடம் (குடம் நிறைய தண்ணீருடன்)
நலங்கு மஞ்சள்.

சுமங்கலிகளுக்குக் கொடுக்க வேண்டிய தாம்பூலம்

வெற்றிலை, பாக்கு
மஞ்சள்
குங்குமம்
தேங்காய்
வாழைப்பழம்
புஷ்பம்
சீப்பு
கண்ணாடி
கண்ணாடி வளையல் (4+4)
மருதாணி (பொடி அல்லது Cone)
ரவிக்கைத் துண்டு


ராஜப்பா
22-01-2010
பகல் 12 மணி

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...