Showing posts with label Kofta. Show all posts
Showing posts with label Kofta. Show all posts

11 January 2018

வாழைக்காய் கோஃப்தா

வாழைக்காய் கோஃப்தா

தேவையானவை
வாழைக்காய், 2

கோஃப்தாவுடன் சேர்த்து பிசைய:
வெங்காயம்,  60 கிராம்
இஞ்சி, 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய், 6,
கொத்தமல்லி தழை, 20 கிராம்
இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

எண்ணெய், 150 கிராம்


VAZHAI KAI KOFTA

க்ரேவி பண்ண
ஏலக்காய், 6
பட்டை, சிறியது
கிராம்பு, 4
வெங்காயம், பொடியாக நறுக்கியது, 60 கிராம்

பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது, 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி, நறுக்கியது, 3
மிளகாய்த் தூள், 1 டீஸ்பூன்
உப்பு
புதிய க்ரீம், 60 கிராம்


செய்முறை

வாழைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போட்டு 30 நிமிஷங்கள் வேக விடவும்.

ஆறியபின், தோல் உரித்து, நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

இதை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பசசை மிளகாய், கொத்தமல்லித் தழை, உப்பு ஆகியவற்றுடன் கலந்து பிசைந்து கொள்ளவும். 15 பந்துகளாக உருட்டவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இவற்றைப் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

அதே வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு பொரிக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பூண்டு, இஞ்சி விழுது போட்டு வதக்கவும்.

தக்காளியை மிக்சியில் அரைத்து, இதில் போடவும்; மிளகாய்ப் பொடி, கொஞ்சம் உப்பு சேர்ககவும்.

2 - 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

இந்த க்ரேவியில், கோஃப்தாக்களைப் போட்டு 10 நிமிஷம் கொதிக்க விடவும்

ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
வாழைக்காய் கோஃப்தா தயார்

ராஜப்பா
11:00 காலை
26-02-2010

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...