01 February 2008

Sprouted Moong Dal Koottu --- (Ramesh)

தேவையானவை

பச்சைப்பயறு முளைகட்டியது – 1 கப்

வாழைக்காய் (அ) உருளைக்கிழங்கு (அ) பூசணிக்காய் (அ) பரங்கிக்காய் – 1/2 கப்

துருவிய தேங்காய் – 1 கப்

தனியா – 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் – சிட்டிகை

சிகப்பு மிளகாய் – 3 அல்ல்து 4

புளி கரைத்தது – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு – தாளிக்க

கறிவேப்பிலை 6-8 தழைகள்

எண்ணெய் – கொஞ்சம்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

எண்ணையை சூடாக்கி, தனியா மற்றும் மிளகாய் போட்டு வறுக்கவும்.

தேங்காய், புளி, உப்புடன் சேர்த்து இதை அரைக்கவும்.

பிரஷர் குக்கரில் பச்சைப்பயிறு, வாழைக்காய் போட்டு வேக விடவும். (ஏதேனும் ஒரு காய் போதும்)

வாணலியை சூடாக்கி, வேகவைத்ததை போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விடடவும். கொதி வந்ததும், மசாலா விழுதை போட்டு மீண்டும் 6-7 நிமிஷங்களுக்கு கொதிக்க விடவும்.

கடுகு, கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்க்கவும்

சாதம், அல்லது சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

ரமேஷ்
1 feb 2008
11:55 AM

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...