15 September 2017

Salna -2

SALNA

TABLE 1

எண்ணெய் 2 டீஸ்பூன், 
இஞ்சி நறுக்கியது 1 டேஸ்பூன், 
பூண்டு  4 பல்
ஜீரகம்  1 டீஸ்பூன், 
சோம்பு 1 டீஸ்பூன், 
சிகப்பு மிளகாய்  2,
பச்சை மிளகாய்  1,
தனியா (whole) 1 டீஸ்பூன்,
பொட்டுக் கடலை 2 டேஸ்பூன்,
கிராம்பு  2, 
பட்டை கொஞ்சம், 
உப்பு,
ஏலக்காய்  2, 
தேங்காய் துருவியது 3 டேஸ்பூன்,  வெங்காயம் நறுக்கியது 1 மீடியம்
தக்காளி நறுக்கியது  1 மீடியம்.
TABLE 2
எண்ணெய் 2 டீஸ்பூன், 
கடுகு 1/4 டீஸ்பூன், 
வெங்காயம் நறுக்கியது 1 மீடியம், தக்காளி நறுக்கியது  1 மீடியம், 
வேக வைத்த காய்கறிகள் 1/2 கப், [காரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃபிளவர்,  பச்சைப் பட்டாணி],
கொத்தமல்லி தழை,
புதினா தழை

செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், சோம்பு, சிகப்பு மிளகாய் கிள்ளியது, தனியா whole,  ஏலக்காய், பட்டை, கிராம்பு, சேர்த்து 2 நிமிஷம் வதக்கவும்.
 பின்னர், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுப்பை அணைத்து, தேங்காய், பொட்டுக் கடலை சேர்த்து mix பண்ணி ஆறவிடவும்.
ஆறியதும், மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீருடன்  விழுதாக அரைக்கவும்.
டேபிள் 2-ல் உள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, சூடானவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்.
வேகவிட்ட காய்கறிகளை போட்டு வதக்கவும்.
அரைத்த விழுதை போடவும். தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
5-10 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.
உப்பு, கொத்தமல்லி தழை, புதினா தழை போடவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
புரோட்டா, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.

ராஜப்பா


No comments:

Post a Comment

Garam Masala

Ingredients 1/2 cup cumin seeds (jeera) 1/2 cup card...