01 April 2018

புளியோதரை - Ver01

புளியோதரை

நிறைய வீடுகளில் புளியோதரை எனப்படும் புளியஞ்சாதம், கலந்த சாதங்களில் ஒன்றாக செய்யப்படுகிறது. வெளியூருக்குப் போவதானாலும், சுற்றுலா செல்வதானாலும், சாப்பிட புளியோதரை மிகப் பொருத்தமாக அமையும். எனவேதான் ரயில் நிலையங்களில் கூட இது விற்கப்படுகிறது. எல்லாரும் மிக விரும்பி உண்ணும் உணவு இது. கோயில்களிலும் இது பிரசாதமாக தரப்படுகிறது.

புளியோதரை செய்வதற்கு பல முறைகள் உள்ளன. இரண்டை மட்டும் பார்ப்போம்::

எங்கள் வீட்டில் செய்யும் புளியோதரை.

புளிக்காய்ச்சல்.

தேவையானவை

புளி - 200 கி
வரமிளகாய் -15
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 50 கி
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 7 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம், கடுகு, மஞ்சள் பொடி, உப்பு, கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

ஒரு வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தனியா, வரமிளகாய் (8 மட்டும்), வெந்தயம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

இவைகளை மிக்சியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

கொஞ்சம் தண்ணீரில் புளியை ஊறவைத்து, கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, மீதியுள்ள 7 மிளகாய்(இரண்டாக கிள்ளிக்கொண்டு), கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

புளிக்கரைசலை இதில் சேர்க்கவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

எண்ணெய் பிரியும் வரை 30 நிமிஷங்களுக்கு, நன்கு கொதிக்க விடவும்.

பொடி செய்த தனியா, மிளகாயை சேர்க்கவும்.

புளிக்காய்ச்சல் தயார்.

சாதத்தை உதிர் உதிராக வடித்து, புளிக்காய்ச்சலை கலக்கவும். நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பொதுவாகவே அனைத்து வகைப் புளியோதரைகளும், கலந்து சிறிது நேரம் கழித்து பிறகு சாப்பிட்டால் ருசியாக இருக்கும். மறுநாள் என்றால் இன்னும் சுவையோடு இருக்கும்
 
ராஜப்பா
16-03-2010
1030 காலை

திருவல்லிக்கேணி பெருமாள் கோயில் புளியோதரை - செய்முறை இங்கு

ஆந்திரா புளிஹோரா சாப்பிட்டு இருக்கிறீர்களா? வேறே சுவை .. செய்முறை இதோ.

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...