25 January 2009

Paneer Butter Masala

பனீர் பட்டர் மசாலா


பொருட்கள்

பனீர் – 200 கி, வெண்ணெய் – 1 டேஸ்பூன், தக்காளி – 3

வெங்காயம் – 2, முந்திரி – 5-8, கசகசா – 1 டீஸ்பூன்,

வெந்தயக்கீரை (காய்ந்தது) – 1 டீஸ்பூன் (கீரையை தண்ணீரில் ஊறவைக்கவும்)

பால் – 1/2 கப், எண்ணெய், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள்,

மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் – தலா 1 டீஸ்பூன்

சர்க்கரை – 1 சிட்டிகை, உப்பு

அரைக்க: இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய்

செய்முறை

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

நறுக்கிய தக்காளியை அரைத்துக் கொள்ளவும்

முந்திரி, கசகசா, மேதி மூன்றையும் அரைத்துக் கொள்ளவும்

மசாலா பொருட்களையும் அரைத்துக் கொள்ளவும்

பனீரை சிறு துண்டங்களாக் பொரித்துக் கொள்ளவும்

கடாயில் வெண்ணெய் போட்டு சூடானதும், வெங்காயம் போட்டு வதக்கவும்

அதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

பிறகு தக்காளி விழுது, உப்பு சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்ததும், பாலை சேர்க்கவும்,

முந்திரி விழுதை சேர்த்து, பொரித்த பனீரையும் போடவும்.

கொஞ்சம் கொதித்ததும் இறக்கி, பரிமாறவும்

ராஜப்பா
25-01-2009 17:00 PM

** நன்றி: ஆனந்தவிகடன், 28-01-2009 இதழிலிருந்து

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...