19 September 2010

வாழையடி வாழை

வாழைமரம் - மிக உபயோகமுள்ள ஒரு மரம். ஒரு முறை நட்டு விட்டால், “வாழையடி வாழையாக” தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தப் படுகிறது. எல்லா விசேஷங்களுக்கும் வீட்டு வாசலில் வாழைமரத்தைக் கட்டுவது வழக்கம். வரலக்ஷ்மி விரதம், விநாயகர் பூஜை, ஸத்யநாராயண விரதம் போன்ற பூ்ஜைகளில் வாழைக்கன்றுகளை கட்டி வழிபடுகிறோம்.

வாழை இலையில் உணவு பரிமாறுவது நம் தென்னிந்திய விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
.
வாழைப் பூ


100 கிராம் வாழைப்பூவில்
கால்சியம் - 32 மி.கி.
பாஸ்பரஸ் - 42 மி.கி.
புரதம் - 1.3 மி.கி.
நார்ச்சத்து - 1.3 மி.கி.
மற்றும் இரும்புச் சத்து, வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பூ துவர்ப்புத் தன்மை உள்ளதால் இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,.

வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைக்கும். இரத்தம் சுத்தமாகும். இரத்த ஓட்டம் சீராகும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வாழைப் பூ சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு கலந்து அருந்தினால் வெட்டை நோய், குருதி வெள்ளை, வயிற்றுக் கடுப்பு நீங்கும். மலச் சிக்கலைப் போக்கும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும். தாதுவை விருத்தி செய்யும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள்,

வாழைப்பூ - கால் பாங்கு
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டுப்பல் - 4
இஞ்சி - 1 துண்டு
நல்ல மிளகு - 5 எடுத்து சூப் செய்து காலை உணவுக்குப்பின் அருந்தி வந்தால், சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும்.

வாழைத்தண்டு சிறுநீரக கற்களை அகற்றக்க்கூடிய ஒரு சிறந்த மருந்து என்பது யாவரும் அறிந்த ஒன்று.

வாழைக்காயில் நிறைய புரத சத்தும், மாவு சத்தும் உள்ளன. வாழைக்காய் சேர்க்காத பண்டிகை / ஸ்ராத்த சமையல்களே கிடையாது.

வாழைப் பழத்தில் மாவுச் சத்து 27.0%, புரத சத்து 1.2%, கொழுப்பு சத்து 0.3%, நார் சத்து 0.5%, ஈரப்பதம் 70%, வைட்டமின்கள் /தாதுப் பொருட்கள் 1.0% அளவிற்கு உள்ளன. பொட்டாஷியம் அதிக அளவில் உள்ளது.

வாழைப் பழத்தினை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொடுக்க சீதபேதி நிற்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதிக்கு நன்கு கனிந்த பழங்களை பயன்படுத்த வேண்டும். நன்கு குழைத்து கொடுக்க வேண்டும்.

SRIDHAR from New Delhi writes, "Apart from all the benefits of banana it has a great feature, it works as an enzyme. It can control loose motion (if you have 4-5 bananas in one go) and it can release constipation.And u must have noticed one thing,
Azhughi pona vazai pazathail kooda endha oru poochiyo, puzuvo anuguvadhu illai. Highly medicated fruit."

வாழை நார் பூத்தொடுக்க பயன்படுகிறது. வாழை நார் கப்பலில் எண்ணெய் கசிவை நிறுத்துவதில் மிக பயனுள்ளதாக இருக்கிறது.

வாழைப்பட்டை: வாழைமரத்தின் அடி பாகத்திலிருந்து இது கிடைக்கிறது. மிகவும் குளிர்ச்சியானது; மருத்துவ குணங்கள் நிரம்பியது. நெருப்புக் காயங்கள் பட்டு (FIRE BURNS) உடலில் புண்கள் ஏற்படும்போது, வாழைப்பட்டைகளை படுக்கை போல போட்டு அதன் மீது படுக்க வைப்பார்கள்.

வாழை குறித்து இன்னும் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...