08 January 2006

Angaaya Podi அங்காயப் பொடி

ஷீலா ராணி சுங்கத் தமிழக அரசில் ஒரு அதிகாரி. அவர் இன்று [08 ஜனவரி 2012] The New Indian Express-ல் எழுதியுள்ளதை பகிர்ந்து கொள்ளுகிறேன். [நன்றி திருமதி ஷீலா ராணி சுங்கத்திற்கும், Indian Express-க்கும்]

ஜீரணத்திற்கும், சமீபத்தில் குழந்தை பெற்றவர்களுக்கும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருக்கும் இளம்பெண்களுக்கும், ஏன் எல்லாருக்குமே மிகச்சிறந்ததான ஒரு பொடி அங்காயப் பொடி. பல மூலிகைகள், இயற்கை சாமான்கள் அடங்கியது. ஒவ்வொரு வீட்டிலும் தலைமுறை, தலைமுறையாக பாட்டி வழி, அம்மா வழி என வாழையடி வாழையாக வந்துள்ள இந்தப் பொடி செய்வது மிகவும் எளிது.

அங்காயப் பொடியை நல்ல சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டு பிசைந்து சாப்பிட வேண்டும்.

இப்போது, அங்காயப் பொடி செய்முறையை பார்ப்போம். இது எங்கள் அம்மா பண்ணிய, சொல்லிக் கொடுத்த, செய்முறை.

தேவையான பொருட்கள்.

தனியா --- 1/2 கப்
துவரம் பருப்பு --- 6 டேபிள்ஸ்பூன்
காய்ந்த வேப்பம்பூ --- 1/4 கப்
சுண்டைக்காய் வத்தல் --- 20 லிருந்து 30
மணத்தக்காளி வத்தல் --- 1/4 கப்
கறிவேப்பிலை --- 1/2 கப்
மிளகு --- 3 டீஸ்பூன்
கண்டந்திப்பிலி --- 3 சிறிய துண்டுகள்
அரிசி திப்பிலி - கொஞ்சம்
வரமிளகாய் --- 6
ஜீரகம் --- 3 டீஸ்பூன்
ஓமம் --- 1 டீஸ்பூன்
சுக்கு --- 1 சிறிய துண்டு
வெந்தயம் --- 1 டீஸ்பூன்
பெருங்காயம் --- ஒரு சிறிய துண்டு (அல்லது பொடியாக இருந்தால் 1/2 டீஸ்பூன்)
கல் உப்பு --- 1 அல்லது 2 டீஸ்பூன்.

செய்முறை

உப்பைத் தவிர மற்ற எல்லாவற்றையும் (எண்ணெய் விடாமல்) சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

உப்பை சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கவும்.

அங்காயப் பொடி தயார்.

அங்காயப் பொடியின் மருத்துவ குணங்கள் ::

தனியா (கொத்தமல்லி விதை) ஒரு சிறந்த anti-oxidant; cholesterol ஐ குறைக்கும் வல்லமை பெற்றது. மற்றும் anti-bacterial, and diuretic.

வேப்பம்பூ [நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்] கண் பார்வைக்கு சிறந்தது; ஜீரணத்திற்கு, முக்கியமாக LIVER சம்பந்தமானவைகளுக்கு மிகவும் சிறந்தது. மேலும், குடல் புழுக்களை (intestinal worms) அழிப்பதில் வேப்பம்பூ பெயர் பெற்றது.

சுண்டைக்காய் வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் இரண்டுமே வாயுவை (GAS) குறைப்பவை.

சுண்டைக்காய் வத்தல் anti-bacterial and anti-microbial குணம் படைத்தது.

மணத்தக்காளி கீரையும், வத்தலும் விட்டமின் B நிரம்பியவை. வாய் மற்றும் குடல் புண்களை ஆற்றும் சக்தி படைத்தவை. குடல் சம்பந்தமான நோய்களுக்கு மிக மிக சிறந்தது.

கறிவேப்பிலையும், தனியாவும் நார்ச்சத்து [FIBRE] நிரம்பியவை. கறிவேப்பிலையில் இரும்புச் சத்து நிறைய உள்ளது; இது anti-diabetic மற்றும் anti-oxidant. இளம் நரையை தவிர்க்கிறது.

கறிவேப்பிலையில் anti-cancer குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன.

ஓமம், ஜீரகம், மிளகு, சுக்கு யாவையுமே ஜீரணத்திற்கு நல்லவை.

கண்டந்திப்பிலி ஜலதோஷம், உடல்வலி, தொண்டை கரகரப்பு, அஜீரணம் ஆகியவைகளுக்கு நல்லது

அரிசி திப்பிலி குடல் புழுக்களை அழிப்பதில் சிறந்தது.

[இவை எல்லாமே நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.]
 
Rajappa
10:00 AM
08-01-2012

1 comment:

  1. A Very useful and a good write up . Every one must cultivate the habit of using this Powder atleast 1 time in a week thugh not 2 times. Rajappa ! Continue this useful infos.

    S.Sundaresan, Pune, 08th Jan'12

    ReplyDelete

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...