25 January 2012

Carrot Halwa [Gajar ka Halwa]

நேற்று (24-01-2012) காலை மார்க்கெட்டில் காரட்கள் (GAJAR) தளதளவென்று பிஞ்சாக, இளசாக, “வாங்குங்கள், வாங்குங்கள்” எனக் கூவி கூவி அழைத்தன.
GAJAR
விலையும் பரவாயில்லை (கிலோ 40.00). Temptation தாங்கமாட்டாமல் உடனே 1/2 கிலோ வாங்கிவிட்டேன்.

வீட்டில் காரட்டுகளை நன்றாக அலம்பி, தோல் சீவினோம். மீண்டும் இன்னொரு முறை அலம்பிவிட்டு, துருவ ஆரம்பித்தோம். காரட் துருவல் ஒரு கடினமான காரியம் !

துருவிக் கொண்டிருக்கும் போதே, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் பாலை கொதிக்க விட்டோம். ஒரு பாத்திரத்தில் துருவிய காரட்டை  போட்டு, ஒரு டம்ளர் பால் சேர்த்து, குக்கரில் வைத்து வேக விட்டோம். 3 விஸில் வந்ததும், குக்கரை அணைக்கவும். குக்கர் ஆறட்டும்.

பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் பால் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வேண்டும் (சுமார் 1/2 மணி நேரம் பொறுமை தேவை).

ஒரு கடாயில் காரட் துருவலை போட்டு, சுண்டிய பாலை அதில் விட்டு, 1/2 கிலோ சர்க்கரை சேர்த்து கிளறவும். 

சுமார் 20 நிமிஷங்கள் கிளறி, காரட் ஹல்வா பதத்திற்கு வந்ததும், 3 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, நன்கு கிளறவும்.

[தேவையானால், 10 முந்திரி, 6 கிஸ்மிஸ் (உலர்ந்த திராக்ஷை), 4 பாதாம், கொஞ்சம் ஏலக்காய் பொடி இவற்றை நெய்யில் வறுத்து ஹல்வாவில் சேர்க்கலாம் பிஸ்தா பருப்புகளை நெய்யில் வறுக்கக் கூடாது; அப்படியே போடவும். நாங்கள் மேற்சொன்ன எதையும் போடவில்லை.]

ஹல்வா ரெடி.


பண்ணிய சில நிமிஷங்களிலேயே ஹல்வா 3/4 வாசி காலி ! [நான் ஒரு துளி கூட சாப்பிடவில்லை. அதிதி ரசித்து சாப்பிட்டதை பார்த்தே என் மனம் நிரம்பியது; வயிறும் கூட]

ராஜப்பா
10:40 காலை
25 ஜனவரி 2012














19 September 2010

வாழைக்காய்

வாழைக்காயை பல விதமாக சமைக்கலாம்.

வாழைக்காய்களை தோல் சீவி, துண்டங்களாக் நறுக்கிக் கொண்டு, தண்ணீரில் போடவும். கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். பாதி வெந்தால் கூட போதும். தண்ணீரை இறுத்து விடவும்.

உளுத்தம்பருப்பு, மிளகு, வரமிளகாய் ஆகியவற்றை (எண்ணெயோ, தண்ணீரோ விடாமல்) வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெந்த வாழைக்காயை போடவும். அரைத்த பொடியையும் போடவும்.

காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பருப்பு அரைத்த கறியாகவும், பொடி தூவிய கறியாகவும் செய்யலாம்.

வாழைக்காய் பொடி.
(மீனாக்ஷி அம்மாள், பகுதி 01)

வாழைக்காய்களை முழுதாகவோ, இரண்டாக நறுக்கியோ கொஞ்சமாக புளி கரைத்த நீரில் வேக விடவும். அல்லது நல்ல தணலில் காயை தோலுடன் போட்டு தோல் கருக சுட்டு எடுத்து உரித்துக் கொள்ளவும்.

3 காய்களுக்கு தேவையானவை :: மிளகாய் வற்றல் 6 - 8; துவரம் பருப்பு 2 டீஸ்பூன், உ.பருப்பு 2 டீஸ்பூன்கள், கடுகு தாளிக்க, பெருங்காயம் சிறிது.

வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் மேற்சொன்ன சாமான்களை போட்டு சிவக்க வறுக்கவும். மிக்ஸியில் வறுத்த சாமான்களை போட்டு, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும்.

உரித்து வைத்துள்ள வாழைக்காயை உதிர்த்து மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.


வாழைக்காய் பொரியல்.
(நன்றி: காயத்ரி வெங்கட், அவரது பதிவிலிருந்து)
















தேவையானவை


வாழைக்காய்- 1
சாம்பார்பொடி- 2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு


1. வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும்.

2. பிடித்த வடிவத்தில் வாழைக்காயைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

3. அடுப்பில் எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிதம் செய்து கொண்டு கடுகு வெடித்தவுடன் சீரகத்தைப் போட்டு வதக்கி விடவும்.

4. வாழைக்காய் துண்டுகளை தாளித்தவற்றுடன் போட்டு உப்பு போட்டு 1/4 டம்ளர் நீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும்.

5. பாதி வெந்ததும் சாம்பார்பொடி, பெருங்காயம் சேர்த்து திறந்து வைத்துக் கிளறி வரவும். அடிப்பிடிக்காமல் இருக்க எண்ணெய் ஊற்றவும்.

6. வறுவலாகத் தயாரானதும் அடுப்பை அணைத்து விட்டு பொரியலை வேறு பாத்திரத்திற்கு மாற்றிப் பரிமாறவும்.



RAW BANANA GRILL
(JAYASHREE VENKAT, New Delhi, 18-09-2010)

INGREDIENTS
Raw Banana - 2
Cashew nut paste - 3 tbsp
Green chilli paste - 1 tbsp
Fresh Cream - 1 tbsp
Hung curd - 2 tbsp
Cardamom powder - 1 tbsp
Crushed peppercorn - 1 tbsp
Salt - To taste


METHOD
Peel the raw bananas and cut it into three pieces. Boil and keep aside.


Mix cashew nut paste, cardamom powder, green chilli paste, cream, hung curd and salt together.


Now, marinate the banana with the above mixture.


Keep it for few minutes and then, cook it in a tandoor for about five minutes.


Serve hot.


வாழைக்காய் பிரட்டல்

1. வாழைக்காய்களை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் தண்ணீரில் போடவும். கொஞ்சம் மஞ்சள்தூளையும் சேர்த்து வேக விடவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிப்பை சேர்த்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

3. மிளகாய்த்தூளை தண்ணீரில் கலந்து் இதில் ஊற்றி, வேக வைத்த வாழைக்காய்களை போடவும்.

5. உப்பை சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.

வாழைக்காய் பிரட்டல் ரெடி.


வாழைக்காய் வறுவல்.

வாழைக்காய்களை தோல் சீவி, வட்ட வட்ட  வில்லைகளாக சீவிக் கொள்ளவும். வ்றுவல்-சீவியிலும் சீவிக்கொள்ளலாம்.

ஈரம் போக உலர்த்திக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், வாழைக்காய் சீவல்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

பேப்பர் டிஷ்யூவில் வைத்து எண்ணெய் போக வைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மிளகாய்த் தூள் கலவையை பிசிறவும்.

இதே போன்று எல்லா சீவல்களையும் ஈடு-ஈடாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.




ராஜப்பா






வாழைத் தண்டு



வாழைத்தண்டு நார்ச் சத்து நிறைந்த, பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது ரத்தத்தை தூய்மைப்படுத்தும் குணம் கொண்டது. ரத்தக் கொழுப்பை குறைக்கும் வாரத்திற்கு இரண்டு முறையாவது வாழைத்தண்டை சமைத்து சாப்பிட வேண்டும்.

சிறுநீரக கற்கள் (KIDNEY STONES) கரைக்க / வெளியேற்ற வாழைத்தண்டு மிக நல்லது. தண்டின் சாறை தினமும் குடித்து வர, பல குடல்-ச்ம்மந்தப் ப்ட்ட நோய்கள் குணமாகும்.

வாழைத்தண்டு கறி

வாழைத்தண்டை நார் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, கொஞ்சம் மோர் சேர்த்த நீரில் போடவும். மோர் சேர்த்தால் வாழை கறுக்காமல் இருக்கும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வரமிளகாய் (கிள்ளிப் போட்டது) -- தேவையானால் உளுத்தம்பருப்பையும் போடலாம் --ஆகியவற்றை தாளித்து, தண்டை அலம்பி இதில் போடவும்.

ஒரு கைப்பிடி பயத்தம்பருப்பை இதன் மேல் போடவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

தண்ணீர் தெளித்து வேக விடவும்.

வெந்ததும் அடுப்பை அணைக்கவும்
 வாழைத்தண்டு கறி ரெடி. வேண்டுமானால் தேங்காய் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.

வாழைத்தண்டு கூட்டு

வாழைத்தண்டு கோசுமல்லி.

வாழைத்தண்டை நாரில்லாமல் சிறு துண்டங்களாக நறுக்கி, மோர் விட்ட தண்ணீரில் போடவும். பின்னர் நன்றாக அலம்பி, 1 டீஸ்பூன் உப்பு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பிசிறவும்.

சற்று நேரம் கழித்து (MARINATE), ஒட்டப் பிழிந்து கொள்ளவும்.

இதில், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழியவும்.

சிறிது கருவேப்பிலையை கிள்ளிப் போடவும்.

சிறிது பெருங்காயத்தை கரைத்து ஊற்றவும்.

2 டீஸ்பூன்கள் எண்ணெயில், கடுகு, 2 பச்சை மிளகாய்கள் தாளித்துக் கொட்டவும்.


வாழைப்பூ உசிலி



வாழைப்பூ உசிலி

வாழைப்பூ, 1
துவரம்பருப்பு, 100 கி
கடலைப் பருப்பு, 75 கி
மிளகாய் வற்றல், 8
எண்ணெய், 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க = கடுகு, பெருங்காயம்
உப்பு

செய்முறை
வாழைப்பூவை ஆய்ந்து, பொடிதாக நறுக்கி, சிறிது மோர் ஊற்றிய நீரில் போடவும்.

தண்ணீரில் வேக விடவும்.

தண்ணீரை இறுத்து, காயை தனியாக வைத்துக் கொள்ளவும்.

மேற்சொன்ன பருப்புகளை 30 நிமிஷம் ஊறவைக்கவும்.

மிளகாய் வற்றல், உப்பு போட்டு கரகரவென (வடை மாவு பதத்திற்கு) அரைக்கவும்.

பந்துகளாக உருட்டி, குக்கரில் ஆவியில் வேக விடவும்.

ஆறியதும், பருப்பு கலவையை உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

காயையும் பருப்பையும் போட்டு சுமார் 5 நிமிஷம் கிளறவும்.

உசிலி ரெடி.





வாழையடி வாழை

வாழைமரம் - மிக உபயோகமுள்ள ஒரு மரம். ஒரு முறை நட்டு விட்டால், “வாழையடி வாழையாக” தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தப் படுகிறது. எல்லா விசேஷங்களுக்கும் வீட்டு வாசலில் வாழைமரத்தைக் கட்டுவது வழக்கம். வரலக்ஷ்மி விரதம், விநாயகர் பூஜை, ஸத்யநாராயண விரதம் போன்ற பூ்ஜைகளில் வாழைக்கன்றுகளை கட்டி வழிபடுகிறோம்.

வாழை இலையில் உணவு பரிமாறுவது நம் தென்னிந்திய விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
.
வாழைப் பூ


100 கிராம் வாழைப்பூவில்
கால்சியம் - 32 மி.கி.
பாஸ்பரஸ் - 42 மி.கி.
புரதம் - 1.3 மி.கி.
நார்ச்சத்து - 1.3 மி.கி.
மற்றும் இரும்புச் சத்து, வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பூ துவர்ப்புத் தன்மை உள்ளதால் இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,.

வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைக்கும். இரத்தம் சுத்தமாகும். இரத்த ஓட்டம் சீராகும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வாழைப் பூ சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு கலந்து அருந்தினால் வெட்டை நோய், குருதி வெள்ளை, வயிற்றுக் கடுப்பு நீங்கும். மலச் சிக்கலைப் போக்கும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும். தாதுவை விருத்தி செய்யும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள்,

வாழைப்பூ - கால் பாங்கு
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டுப்பல் - 4
இஞ்சி - 1 துண்டு
நல்ல மிளகு - 5 எடுத்து சூப் செய்து காலை உணவுக்குப்பின் அருந்தி வந்தால், சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும்.

வாழைத்தண்டு சிறுநீரக கற்களை அகற்றக்க்கூடிய ஒரு சிறந்த மருந்து என்பது யாவரும் அறிந்த ஒன்று.

வாழைக்காயில் நிறைய புரத சத்தும், மாவு சத்தும் உள்ளன. வாழைக்காய் சேர்க்காத பண்டிகை / ஸ்ராத்த சமையல்களே கிடையாது.

வாழைப் பழத்தில் மாவுச் சத்து 27.0%, புரத சத்து 1.2%, கொழுப்பு சத்து 0.3%, நார் சத்து 0.5%, ஈரப்பதம் 70%, வைட்டமின்கள் /தாதுப் பொருட்கள் 1.0% அளவிற்கு உள்ளன. பொட்டாஷியம் அதிக அளவில் உள்ளது.

வாழைப் பழத்தினை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொடுக்க சீதபேதி நிற்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதிக்கு நன்கு கனிந்த பழங்களை பயன்படுத்த வேண்டும். நன்கு குழைத்து கொடுக்க வேண்டும்.

SRIDHAR from New Delhi writes, "Apart from all the benefits of banana it has a great feature, it works as an enzyme. It can control loose motion (if you have 4-5 bananas in one go) and it can release constipation.



And u must have noticed one thing,
Azhughi pona vazai pazathail kooda endha oru poochiyo, puzuvo anuguvadhu illai. Highly medicated fruit."

வாழை நார் பூத்தொடுக்க பயன்படுகிறது. வாழை நார் கப்பலில் எண்ணெய் கசிவை நிறுத்துவதில் மிக பயனுள்ளதாக இருக்கிறது.

வாழைப்பட்டை: வாழைமரத்தின் அடி பாகத்திலிருந்து இது கிடைக்கிறது. மிகவும் குளிர்ச்சியானது; மருத்துவ குணங்கள் நிரம்பியது. நெருப்புக் காயங்கள் பட்டு (FIRE BURNS) உடலில் புண்கள் ஏற்படும்போது, வாழைப்பட்டைகளை படுக்கை போல போட்டு அதன் மீது படுக்க வைப்பார்கள்.

வாழை குறித்து இன்னும் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.

20 July 2010

SPINACH SAUCE

Spinach Sauce
(Spinach = Paalak)

Ingredients

1 kg spinach, blanched, squeezed, dry and coarsely chopped.
1 cup onion, diced
4 cloves garlic, minced
1 tbsp butter
250 grams cooked noodles, or pasta, or potatoes
Cheese, freshly grated

Method

Heat butter in a pan

Add onion and saute until transparent.

Add garlic and saute for a minute.

Add spinach (paalak) and stir-fry until bright green.

Remove from flame, and cool.

When cool, blend to a paste using a little water if required.

When done, reheat gently and add cooked noodles or pasta or potatoes.

Stir properly so it is well coated.

Serve warm with grated cheese.

rajappa
11:25 AM
20 July 2010

** from Readers' Digest,  January 2010

05 March 2010

பருப்பு உசிலிகள்

பருப்பு உசிலிகள்

பருப்பு உசிலிகள், அதுவும் கொத்தவங்காய் உசிலி, தமிழ்நாட்டின் விசேஷ உணவு. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகப் பிடித்தது. மோர்க்குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால், ருசியோ ருசி!

# 1. கொத்தவரங்காய் பருப்பு உசிலி


கொத்தவரங்காய், 500 கிராம்
துவரம்பருப்பு, 100 கி
கடலைப் பருப்பு, 75 கி
மிளகாய் வற்றல், 8
எண்ணெய், 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க = கடுகு, பெருங்காயம்
உப்பு

காயை அலம்பி, பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.

தண்ணீரில் வேக விடவும்.

தண்ணீரை இறுத்து, காயை தனியாக வைத்துக் கொள்ளவும்.

பருப்புகளை 30 நிமிஷம் ஊறவைக்கவும்.

மிளகாய் வற்றல், உப்பு போட்டு கரகரவென (வடை மாவு பதத்திற்கு) அரைக்கவும்.

பந்துகளாக உருட்டி, குக்கரில் ஆவியில் வேக விடவும்.

ஆறியதும், பருப்பு கலவையை உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

காயையும் பருப்பையும் போட்டு சுமார் 5 நிமிஷம் கிளறவும்.

உசிலி ரெடி

# 2. பீன்ஸ் பருப்பு உசிலி

எல்லா உசிலிகளுக்கும் செய்முறை ஒரேமாதிரிதான்.

# 3. வாழைப்பூ பருப்பு உசிலி


# 4. முட்டை கோஸ் பருப்பு உசிலி


ராஜப்பா
5:00 PM
5 March 2010

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...