01 October 2017

Vegetable Kuruma

VEGETABLE KURUMA (19-05-2018)

உருளைக்கிழங்கு  - 2
வெங்காயம் - 1
காரட் -1
காலிஃப்ளவர் - கொஞ்சம்
பீட்ரூட் - கொஞ்சம்
பூண்டு - 10 பல்
பூண்டு இஞ்சி விழுது
பச்சை மிளகாய் 3
இஞ்சி 1”
கிராம்பு, ஏலக்காய், பட்டை, இலை
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா பொடி
சோம்பு, தேங்காய் துருவியது, முந்திரி இவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும்.
எண்ணெய்.



எல்லா காய்களையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடிசாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை உரித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு போட்டு காய்களை வேக விடவும் (10 - 12 நிமிஷங்கள் ஆகலாம்)
வெந்த காய்களை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
அதே கடாயில் சிறித் எண்ணெய் விட்டு, சூடானதும், கிராம்பு, ஏலக்காய், பட்டை, இலை ஆகியவற்றை போடவும்.
அடுத்து வெங்காயம் போட்டு 4 நிமிஷம் வதக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
பூண்டு இஞ்சி விழுது போட்டு வதக்கவும்.
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா போடவும்.
தண்ணீர் விட்டு 10 நிமிஷம் கொதிக்க விடவும்.
தேங்காய், முந்திரி, சோம்பு விழுதை போட்டு, நன்றாக கலக்கவும்.
1 நிமிஷம் கழித்து அடுப்பை அணைக்கலாம்.
குருமா ரெடி.



I prepared this KURUMA on 19-5-2018.

19-05-2018

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...