11 December 2017

Vegetable Cutlet

நேற்று மதியம் கட்லட் செய்து சாப்பிடலாம் என திடீரென தோன்றியது. பிறகு என்ன, சுறுசுறுப்பாக எழுந்து, வேலையை துவக்கினேன்.

நான்கு உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கினேன். பச்சைப் பட்டாணியை உரித்து 3/4 கப் எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் பீன்ஸ், ஒரு பீட்ரூட் (தோல் சீவியது), 3 காரட் (தோல் சீவியது) ஆகியவற்றையும் நறுக்கி எல்லாவற்றையும் வேக விட்டேன். கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். [குடைமிளகாயையும் போடலாம்]

2 வெங்காயத்தையும், 4 பச்சை மிளகாய்களையும் நறுக்கினேன். இஞ்சி வாசனை பிடிக்குமா, கொஞ்சம் இஞ்சியையும் தோல் சீவி நறுக்கிக் கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், மிளகாயை வதக்கினேன். பின்னர் வெந்த காய்களை சேர்த்து வதக்கினேன். 2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடியையும், கொஞ்சம் உப்பையும் போட்டேன். புதிய பச்சைக் கொத்தம்ல்லி தழைகளை நறுக்கி போட்டேன். உருளைக்கிழங்கை இப்போது போடாதீர்கள். காய்கள் வதங்கியதும் அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிட்டேன். பின்னர், உ.கிழங்கை மசித்து அதில் சேர்த்தேன். எல்லாக் காய்களையும் ஒன்று சேர்த்து தயிர்-மத்தால் மசித்துக் கொண்டேன். தண்ணீர் இருக்கக் கூடாது. ஒரு 20 நிமிஷங்கள் வடிய விட்டேன்.

3 டேபிள் ஸ்பூன் சோளமாவை (CORN FLOUR) சிறிது தண்ணீரில் கரைத்து கொண்டேன்; [மைதா மாவையும் உபயோகிக்கலாம்] காய்கள் கலவையை சிறு உருண்டைகளாக வடை மாதிரி தட்டிக்கொண்டு, இந்த சோளமாவு கரைசலில் தோய்த்து, உடனே BREAD CRUMBS-ல் புரட்டிக் கொண்டேன்.

இந்த ”கட்லட்களை” Refrigerator-ல் ஒரு மணி நேரம் வைத்தேன். பிறகு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் மூன்று, நான்கு கட்லட்களை போட்டு இரண்டு பக்கமும் brown ஆகுமாறு பொன்னிறமாக shallow-fry பண்ணினேன். வாணலியில் போடும்போது கட்லட்கள் பிரியாமல், உடையாமல் பார்த்துக் கொள்ளவும் (Fridge-ல் வைப்பது இதற்காகத்தான்)

தக்காளி கெட்சப் அல்லது சாஸுடன் சாப்பிடுங்கள்.

ராஜப்பா
5:45 மாலை
14-12-2011

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...