20 February 2018

சிதம்பரம் கொத்ஸு - 2

சிதம்பரம் கொத்ஸுவைப் பற்றி ஏற்கனவே (22-06-2013) எழுதி இருந்தேன். அதன் இன்னொரு செய்முறை.
[ வரகூர் நாராயணனுக்கு நன்றிகள் ]

சிதம்பரம் கொத்சு

சம்பா சாதமும் கத்தரிக்காய் கொத்சும் சிவனையே சொக்க வைக்கும் நைவேத்தியம். பாரம்பரியமான இந்த கொத்சு தீட்சிதர்களால் செய்யப்படுவது போலவே, சிதம்பரத்தில் சில ஹோட்டல்களிலும் செய்யப்படுகிறது. இட்லிக்கு கொத்சுதான் துணை. வேறு சட்னி சாம்பாரா ? அதற்கெல்லாம் இங்கே வேலையே இல்லை. பெரும்பாலான ஹோட்டல்களில் பார்சல் கொத்சு கிடையாது…. எக்ஸ்ட்ரா சார்ஜ் சில இடங்களில்.


சிதம்பரம் செல்லும் முன்பே கொத்ஸின் அருமை பெருமைகளை முழுக்க அறிந்திருந்ததால், அங்குள்ள பல ஹோட்டல்களில் சுவைத்துப் பார்த்தோம். பெஸ்ட்என்று நமது சுவை மொட்டுகள் சான்றிதழ் அளித்தது உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் கொத்சுவுக்கே. புதுச்சேரி முதல்வரும் பல அமைச்சர்களும் இங்கு வாடிக்கையாளர்களாம். 46 ஆண்டு பாரம்பரிய ஹோட்டல். பிச்சாவரம் படப்பிடிப்புக்கு வந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு இங்கிருந்து பார்சல் அனுப்புவார்களாம். சிதம்பரம் நாட்டியாஞ்சலி கலைஞர்களின் வருகை இங்கு கொத்சு சாப்பிடாமல் நிறைவு அடையாதாம்!

மாலை 4.30 மணிக்குத் தயாராகும் கொத்சு அடுத்த இரண்டே மணி நேரங்களில் தீர்ந்து விடுகிறது. நல்ல கெட்டியான கொத்சு. சூடான இட்லிக்கு அப்படி ஒரு கச்சிதமான துணை. கோயிலில் சாப்பிட்ட சம்பா சாதம் + கொத்சுவுக்கு ஈடாக, இங்கே பொங்கலுக்கும் கொத்சு. டயட்டாவது ஒன்றாவது என்று எல்லோரையும் சுண்டி இழுக்கிறது சுவை.

எப்படி இப்படி ஒரு கொத்சு என்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் ஹோட்டலின் உரிமையாளர் சுப்ரமணிய பட், மேலாளர் நவீன் குமார் ஆகியோரைக் கேட்ட போது, “சுவைக்காக நாங்கள் எந்த காம்ப்ரமைசும் செய்வதில்லை. கோயிலில் செய்யப்படும் கொத்சுவில் வெங்காயம் இல்லை. இங்கு வெங்காயம் உள்ளது மட்டுமே வித்தியாசம். சிறிது வெல்லம் சேர்க்கிறோம். கத்தரிக்காய் பிஞ்சாக இருக்க வேண்டும்அவ்வளவுதான்இதற்கு மேல் சொல்ல முடியாதுஏனெனில் இதுவும் சிதம்பர ரகசியமேஎன்று வழியனுப்பி வைத்துவிட்டனர் நம்மை. கொத்ஸின் மகத்துவமே அந்த சீக்ரட் பொடிதான் என்பது பளிச்சென புரிந்தது நமக்கு. அந்த ஃபார்முலாவை நாம்தானே கண்டுபிடிக்க வேண்டும். இதோ களமிறங்கி விட்டோம்.

கொத்சு புராணம் தொடரும்

 கொத்சு பொடி

என்னென்ன தேவை ?
கொத்தமல்லி (தனியா) கால் கப்

கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 10
பெருங்காயம் சிறிது

எண்ணெய் கால் டீ ஸ்பூன்

எப்படிச் செய்வது ?
எண்ணெய் விட்டு மேற்கூறிய பொருட்களை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.

 சம்பா சாதம்

என்னென்ன தேவை ?
உதிராக வடித்த பச்சரிசி சாதம் ஒரு கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு அரை டேபிள் ஸ்பூன்
ஜீரகம் ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு கால் டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு
மிளகாய் வற்றல் ஒன்று
உப்பு தேவையான அளவு
முந்திரி தேவையான அளவு
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது ?
ஒரு துளி நெய் விட்டு, மிளகு, ஜீரகத்தை மணம் வரும் வரை வறுத்து , மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.


சாதத்தை உதிர்த்து, சிறிது நெய் விட்டு பிசறி வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி, மிளகாய் வற்றல், கறி வேப்பிலை தாளித்து சாதத்தில் போடவும்.

பொடித்த மிளகு, ஜீரகப் பொடியையும், உப்பையும் போட்டு நன்கு கலந்து விடவும்.

விரும்பினால் முந்திரிக்குப் பதில் சிறிது வேர்க்கடலையையும் சேர்க்கலாம்.

ராஜப்பா
27-12-2013
6:15 மாலை

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...