01 November 2017

பூண்டு ஊறுகாய்

POONDU URUGAI
பூண்டு –                               1/4 கிலோ
நல்லெண்ணெய் –        2 மே. க.
உப்பு –                                    தேவைக்கு
எலுமிச்சம் பழம் –           1
அரைக்க :
கடுகு –                                       1 தே. க.
சீரகம் –                                      1 தே. க.
மல்லி விதை –                      1 தே. க.
மிளகாய் பொடி –                   2 தே. க.
வெந்தயம் –                             1 தே. க.
பெருங்காயம் –                       1 தே. க.

பூண்டை உரித்து கொள்ளவும்.
வாணலியில் அரைக்க கொடுத்துள்ளதை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பூண்டை போட்டு வதக்கவும்.
எண்ணெய் அதிகம் சூடாகாமல் மிதமான சூட்டில் வதக்கவும். (குறைவான சூட்டில் சரியாக வேகாது. அதிக சூட்டில் சீக்கிரம் சிவந்து விடும், ஆனால் வேகாது)
•சற்று சிவந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியையும் உப்பையும் போட்டு கிண்டி, அடுப்பை உடனே அணைத்து விடவும்.
•பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை அதில் விடவும்.
•ஆறியவுடன் கண்ணாடி ஜாடியில் எடுத்து வைக்கவும்.

ராஜப்பா

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...