27 November 2017

உருளைக்கிழங்கு, குடமிளகாய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு 6, வேகவைத்து, தோலுரித்தது.
குடமிளகாய், பெரியது 1, துண்டங்களாக நறுக்கியது
வெங்காயம், 3 நறுக்கியது
தக்காளி, 2 நறுக்கியது
பூண்டு-இஞ்சி விழுது
மிளகுத்தூள், 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜீரகம், சோம்பு - எல்லாம் கொஞ்சம், கொஞ்சம்
மஞ்சள் தூள், உப்பு
எண்ணெய்

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
பூண்டு-இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.
நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
குடமிளகாய் துண்டங்களைப் போட்டு வதக்கவும்.
மஞ்சள் தூள், உப்பு போடவும்.
கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
மிளகாய்த் தூள் போடவும்.
மிளகுத் தூள் சேர்க்கவும்.
5 நிமிஷம் கொதித்ததும், அடுப்பை அணைக்கலாம்.


ராஜப்பா
05/12/2010
10 ம்ணி

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...