29 November 2017

Rajma Masala 01

தேவையானவை.

ராஜ்மா 250 கி
வெங்காயம், பெரியது 2, பொடியாக நறுக்கியது
தக்காளி, பெரியது 2, பொடியாக நறுக்கியது
பூண்டு 8 பல், நறுக்கியது
இஞ்சி, 1” நீளம், நறுக்கியது
பெருங்காயம், மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
ஜீரகம், 1 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய்ப் பொடி, 2 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி, 1 டீஸ்பூன்
தனியா பொடி, 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், 3 டேபிள் ஸ்பூன்
உப்பு

செய்முறை

ராஜ்மாவை 12 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
பின்னர், இந்தத் தண்ணீரை கொட்டிவிட்டு, ராஜ்மாவை நன்கு அலம்பி, புதிய தண்ணீரில் போட்டு, குக்கரில் வேகவைக்கவும்.

ஒரு விசில் வந்ததும், தீயைக் குறைத்து “ஸிம்”மில் 15 நிமிஷங்கள் வேக விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, ஜீரகத்தை தாளிக்கவும்.

பெருங்காயம், நறுக்கிய பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்

நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.

மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், ஜீரகப் பொடி, தனியா தூள் ஆகியவற்றைப் போடவும்.

உப்பு சேர்க்கவும்.

நறுக்கிய தக்காளியைப் போட்டு, கொதிக்க விடவும்.

வெந்த ராஜ்மாவை (வேகவைத்த தண்ணீருடன்) வாணலியில் சேர்க்கவும்.

நன்றாகக் கலந்து, 15 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.

கரம் மசாலாத் தூளை சேர்த்து, இன்னும் 5 நிமிஷம் கொதிக்க விடவும்.

ராஜ்மா மசாலா தயார்.

சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும்; அல்லது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.

ராஜப்பா
12-09-2009
11 மணி

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...