25 November 2017

Green Peas - Potato Gravy (Aloo Mutter)

ALOO MUTTER

ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடாக்கவும். கடுகு, ஜீரகம் சேர்க்கவும். வெடித்தவுடன், பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் ஒன்று, பூண்டு 8-10 பல், பச்சை மிளகாய் 4 (பொடியாக நறுக்கியது) போட்டு வதக்கவும். பூண்டு இஞ்சி விழுது 2 ஸ்பூன் போட்டு வதக்கவும். உப்பு, சிகப்பு மிளகாய்ப் பொடி போடவும்.

ஏற்கனவே உரித்து வேகவைத்த பச்சைப்  பட்டாணியை இதில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 4 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை வேக விட்டு, தோல் உரித்து, கொதிக்கும் பட்டாணியில் உதிர்த்து விடவும். நிறைய தண்ணீர் சேர்த்து 6-8 நிமிஷங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து, பச்சை கொத்தமல்லி சேர்க்கவும்.

இன்று (5-12-2012) காலை டிஃபன் தோசைக்கு இதை (INDUCTION Cooktop) செய்து,  தொட்டுக் கொண்டு சாப்பிட்டோம்.

ராஜப்பா
5-12-2012
11:30 AM

இங்கு சென்னையில் பச்சைப் பட்டாணி கிலோ 40.00

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...