01 November 2017

நெல்லிக்காய் ஊறுகாய்

நெல்லிக்காய் ஊறுகாய்

நெல்லிக்காய்களை நன்கு அலம்பவும்.
இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றாமல், குக்கரில் வைக்கவும்.
மூன்று விசில்கள் வரை வேக வைக்கவும்.
குக்கர் ஆறியவுடன், நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கி விடவும்.
வாணலியில் 7-8 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும், அதை ஆறவிடவும். தனியாக வைத்துக்கொள்ளவும்.
இன்னொரு வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பெருங்காயம் போட்டு வெடிக்கவிடவும்.
இதில், வெந்த நெல்லிக்காய்களை சேர்த்து, 6 டீஸ்பூன் உப்பு போட்டு, 7-8 நிமிஷங்கள் வதக்கவும்.
அயோடைஸ்டு உப்பு போட வேண்டாம்; கல் உப்பை பொடி செய்து பயன்படுத்தவும்.
வாணலியை இறக்கி, ஆறியபிறகு நெல்லிக்காயில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் வெந்தயப்பொடி (வெந்தயத்தை வறுத்து அரைத்தது), 6 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி சேர்க்கவும்.
ஆறவைத்த எண்ணெயை இதில் ஊற்றி நன்கு கலக்கவும்.
நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

குறிப்பிட்டுள்ள அளவுகள் 1/2 கிலோ நெல்லிக்காய்களுக்கு.

(1/2 கிலோ நெல்லிக்காய் விலை ரூ 15.00 மயிலாப்பூரில் நவம்பர் 2009-ல்)

ராஜப்பா

காலை 11.00 மணி

22-11-2009 ---- 12-05-2018
NELLIKKAI URUGAI


No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...