04 December 2017

Morekkali

சமீபத்தில் நீங்கள் மோர்க்களி சாப்பிட்டீர்களா? எப்போது?


பச்சை அரிசி மாவு எடுத்துக் கொள்ளவும். கொஞ்சம் மோரில் (புளிக்க கூடாது) இதை தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், 4-5 மோர்மிள்காய் போட்டு தாளிக்கவும். இதில் மாவு கரைசலை விட்டு, லேசான தீயில் கிளறவும். கையில் ஒட்டாத பதம் வந்தபிறகு, அடுப்பை அணைத்து விட்டு, ரெண்டு நிமிஷம் மூடி வைக்கவும்.

அருமையான மோர்க்களி தயார். (மோருக்கு பதில் புளிக் கரைசலை சேர்த்தால், அது புளி மாவு என அழைக்கப்படும்)

5 நிமிஷத்தில் டிபன் தயார். மோர்க்களி வாழ்க!

Rajappa
26/10/2007
12:20PM

No comments:

Post a Comment

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...